சுபஸ்ரீ விவகாரம் குறித்து பேசிய விஜய் !நல்ல ஒரு மேடையை நியாயமாக பயன்படுத்தியுள்ளார் விஜய்-கமல் பாராட்டு

சுபஸ்ரீ விவகாரத்தில் விஜய் நியாயத்திற்கு குரல் கொடுத்துள்ளார் என்று மக்கள்

By venu | Published: Sep 20, 2019 11:08 AM

சுபஸ்ரீ விவகாரத்தில் விஜய் நியாயத்திற்கு குரல் கொடுத்துள்ளார் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் பேனர் கீழே விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பின்னே வந்தே லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னையில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.பிகில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் இது குறித்து பேசினார். அப்பொழுது அவர் கூறுகையில்,சுபஸ்ரீ விவகாரத்தில் லாரி ஓட்டுநர் மீதும், பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழிபோடுகிறார்கள். யார் மீது பழி போட வேண்டுமோ, அதைச் செய்யாமல் லாரி ஓட்டுநர் மீது பழிபோடுகிறார்கள் என்றும் சுபஸ்ரீ விவகாரத்தில் ட்விட்டரில் ஹேஷ்டேக் போட்டால் நன்றாக இருக்கும் என்றும் பேசினார். இந்த நிலையில் விஜயின் கருத்து குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,நல்ல ஒரு மேடையை நியாயமான குரல் கொடுப்பதற்காக பயன்படுத்தி இருக்கிறார் தம்பி விஜய் என்று தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc