92 கோடி ருபாய் மதிப்பில் பிரமாண்ட யோகா மையம்! 25 கோடி மதிப்புள்ள ஒப்புயர்வு மையம்! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

தமிழக சட்ட பேரவையில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் பல திட்டங்களை அறிவித்தார். தில் முக்கியமானது பிரமாண்ட யோகா மையமும், அரசு மருத்துவமனைக்கு இன்வெர்ட்டர் வசதியும் ஆகும்.

செங்கல்பட்டில் 50 ஏக்கர் பரப்பளவில், பிரமாண்ட யோகா மையம் ருபாய் 92 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளதாகவும், மனநல மருத்துவமனையில் உயர்தர மருத்துவ வசதிக்காக 25 கோடி மதிப்புள்ள ஒப்புயர்வு மையம், அரசு மருத்துவமனைகளில் மின்சாரம் தட்டுப்பாடின்றி கிடைக்க  இன்வெர்ட்டர்கள் அமைக்கப்படும். எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.