திருவாரூர் இடைத்தேர்தல்: தள்ளிவைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு...!

Thiruvarur by-election: Appeal to Madras High Court

திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கருணாநிதி  மறைவால் காலியான  திருவாரூர் தொகுதி: திருவாரூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி வயது மூப்பின் காரணமாக இறந்தார்.இந்நிலையில் அந்த தொகுதிக்கு தேர்தல் நடைபெறும் சூழ்நிலை இருந்தது. திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு :   பின்  ஜனவரி 28-ஆம் தேதி திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.   தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மேலும் வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 10ம் தேதி தொடங்கும்.அதேபோல்  ஜனவரி  31-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இடைத்தேர்தலுக்கான மனுதாக்கல் ஜனவரி 3-ஆம் தேதியும், மனுதாக்கல் செய்ய இறுதி நாள் ஜனவரி 10-ஆம் தேதி என்றும், ஜனவரி 11-ஆம் தேதி முதல் வேட்பு மனுக்களை பெறலாம் என்றும், மனுக்களை திரும்பப் பெற ஜனவரி 14-ஆம் தேதி இறுதி நாள் என்றும் அறிவிக்கப்பட்டது. திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்கக் கோரி முறையீடு:  Image result for திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரசாந்த்  என்ற வழக்கறிஞர் முறையீடு செய்தார். கஜா புயல்  நிவாரணப் பணிகள் தற்போது தான் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. இடைத்தேர்தல் வைத்துள்ளதால் நிவாரணப்பணி பாதிப்பு என்று புகார் அளித்தார். ஆனால்  அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.