பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டதையடுத்து நெல்லையில் அதிரடி சோதனை…..!!!

14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து நெல்லையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது.

ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நெல்லை மாநகராட்சி ஆணையர் நாராயண நாயர் உத்தரவின்படி 10 மாநகராட்சி அதிகாரிகள் கொண்ட 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அனைத்து கடைகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில், சில கடைகளில் பயன்படுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment