சென்சார் செய்யப்பட்ட அசுரன்! பெரியவர்கள் துணையுடன் குழந்தைகளும் இப்படத்தை பார்க்கலாம்!

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் அசுரன். இப்படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மஞ்சுவாரியர், கருணாஸின் மகன் கென் கருணாஸ், ஆடுகளம் நரேன், இயக்குனர் பாலாஜி சக்திவேல் என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் எழுத்தாளர் பூமணி எழுதிய வெட்கை எனும் நாவலை மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் அக்டோபர் 4ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கான வியாபாரம் … Read more

அமெரிக்காவில் மட்டும் 110 திரையரங்குகளை தற்போதே கைப்பற்றிய அசுரன்!

தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் அசுரன். இந்த திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார். கலைபுலி.எஸ்.தாணு தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியானது. பரபரப்பான சண்டை காட்சிகள், நல்ல வசனங்களுடன் வெளியான இந்த டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படம் அக்டோபர் மாதம் 4ம் தேதி வெளியாக உள்ளது. இப்படமானது அமெரிக்காவில் மட்டும் 110 திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மாதிரி தைரியசாலிய பயன்படுத்த தெரிஞ்சவன் தான் புத்திசாலி! – மிரட்டலான அசுரன் ட்ரெய்லர் இதோ!

நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக அசுரன் திரைப்படம் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இப்படத்தை வெற்றிமாறன் இயக்கி உள்ளார். பொல்லாதவன் , ஆடுகளம், வடசென்னை படங்களை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து இருப்பதால் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இப்படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தயாரித்து உள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இன்று இப்பட ட்ரைலர் … Read more

நான்கு முன்னணி இயக்குனர்கள் சேர்ந்து ஒரு ஆன்லைன் படத்தை இயக்க உள்ளனர்!

தற்போது டெக்னாலஜி வளர்ந்து வரும் சூழலில் திரையரங்குகளில் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் தற்போது பெரும்பாலான புதிய இயக்குனர்கள் ஆன்லைன் வெப்சீரிஸ், ஆன்லைன் படங்கள் தயாரிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றனர். இதேபோல் பாலிவுட்டில் முன்னணி இயக்குனர்கள் சேர்ந்து லஸ்ட் ஸ்டோரிஸ் எனும் படத்தை எடுத்து இணையத்தில் வெளியிட்டு இருந்தனர். அதேபோல, தற்போது நான்கு முன்னணி தமிழ் இயக்குனர்கள் சேர்ந்து ஒரு படத்தை எடுத்து அதனை நெட்பிளிக்ஸ் இணையத்தில் வெளியிட உள்ளனர். … Read more

அசுரனுக்கு கண்டிப்பாக அடுத்த வருடம் தேசிய விருதுகள் கிடைக்கும்! வேலையில்லா பட்டதாரி இயக்குனர் பெருமிதம்!

நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக அசுரன் படம் வெளியாக உள்ளது. இப்படம் அக்டோபர் மாதம் நான்காம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார். கலைபுலி எஸ் தாணு தயாரித்துள்ளார். ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. இதில் படத்தில் நடித்த மஞ்சு வாரியார், நடிகர் கருணாஸின் மகன் கென், ஆடுகளம் நரேன், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், தயாரிப்பாளர் என படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இதில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன், … Read more

இன்னும் ஷூட்டிங் கூட முடியவில்லை! அசுரன் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகுமா?! கலக்கத்தில் ரசிகர்கள்!

நடிகர் தனுஷ் – இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணி நான்காவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் அசுரன். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் மூன்று கட்டமாக நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு கட்ட ஷூட்டிங் திருநெல்வேலி, கோவில்பட்டி என தென்தமிழகத்தில் படமாக்கப்பட்டது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் ஷூட் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் படக்குழு அக்டோபர் 4ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என அறிவித்து விட்டனர். இதனால் படம் எப்படி … Read more

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் சங்கத்தலைவனாக மாறிய சமுத்திரக்கனி!

இயக்குனர் வெற்றிமாறன் தற்போது புதிய படம் ஒன்றை தயாரிக்க உள்ளார். இப்படத்தை மணிமாறன் இயக்க உள்ளார். இவர் இதற்க்கு முன்னர் சித்தார்த் நடித்த உதயம் படத்தையும், ஜெய் நடித்த புகழ் படத்தையும் இயக்கியவர் ஆவார். இந்த படத்தில் நடிகர் இயக்குனர் சமுத்திரக்கனி நாயகனாக நடிக்க உள்ளார். தொகுப்பாளினி ரம்யா நாயகியாக நடிக்க உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில்படம் பற்றிய அடுத்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷின் அசுரன் திரையில் களமிறங்கும் நாள் அறிவிப்பு!

வடசென்னை படத்தை அடுத்து  வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், நடித்து வரும் திரைப்படம் அசுரன். கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் மஞ்சு வாரியார் ஹீரோயினாக நடித்துள்ளார்.   ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளர். இப்படத்தின் பாடல்கள் தயாராகி வருவதாக ஜிவி.பிரகாஷ் குமார் டிவிட்டரில் அறிவித்தார். தற்போது பட ரீலீஸையும் படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் அக்டோபர் 4இல் வெளியாகும் என படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் நடிப்பு அசுரன் தனுஷிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

இவரெல்லாம் ஹீரோவா என கூறிய தமிழ் சினிமாவை இவர்தான் ஹீரோ என நினைக்க வைத்தவர் நடிகர் தனுஷ். ஹீரோவிற்கு உண்டான இலக்கணங்களை உடைத்து தனிக்கென தனி பாணியில் பயணித்து வெற்றியும் கண்டு வருகிறார் இவர். தனுஷிற்கு பெரிய ஹிட் படங்கள் என்பதை எளிதாக குறிப்பிட்டு விடலாம். ஆனால் அவரது ஒவ்வொரு படமும் தனுஷின் நடிப்புக்கான ஒவ்வொரு முயற்சி எனபதும், அதனை ஒவ்வொரு படத்திலும் மெருக்கேற்றிக்கொண்டே வருகிறார் என்பதும் உற்று நோக்கினால் மட்டுமே தெரியும். இவருக்கு தனக்குள்ளான நடிப்பை … Read more

வடசென்னை 2 என்ன ஆனது?! சூரியுடன் இணைந்த வெற்றிமாறன்!

பொல்லாதவன் ஆடுகளம் வடசென்னை ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி அசுரன் படத்தில் இணைந்துள்ளது. இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. இந்த படத்தை அடுத்து வடசென்னை பாகம் இரண்டு தயாராகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக சூரியை நாயகனாக வைத்து வெற்றிமாறன் புதிய படத்தை இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது. தற்போது இந்த தகவல் உறுதியாகியுள்ளது. இந்த … Read more