சிதம்பரத்தின் சிபிஐ காவல் செப்டம்பர் 5-ஆம் தேதி வரை நீட்டிப்பு

ப.சிதம்பரத்தின் மேல்முறையீடு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பானுமதி, போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்  விசாரணை நடைபெற்றது.இதில்   சிதம்பரத்தின் சிபிஐ காவலை செப்டம்பர் 5-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

சிதம்பரத்தின் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்!உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மனு

சிதம்பரத்தின் மனுவை உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யவேண்டும் என்று  சி.பி.ஐ.  தரப்பில் பதில்  மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ கைது செய்ததற்கு எதிராக சிதம்பரம் தரப்பில் மனு  தாக்கல் செய்யப்பட்டது.இந்த நிலையில் ப.சிதம்பரத்தின் மனுவை உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யவேண்டும் என்று  சி.பி.ஐ.  தரப்பில் பதில்  மனு ஓன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சி.பி.ஐ. கைது செய்ததை எதிர்த்து சிறப்பு நீதிமன்றத்தில் தான் ப.சிதம்பரம் மனுத் தாக்கல் செய்திருக்க வேண்டும்  என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மீண்டும் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார் சிதம்பரம்  

இன்று மீண்டும் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார் சிதம்பரம். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தனர்.இதனையடுத்து சிதம்பரம்  சிபிஐ  காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.இதனை தொடர்ந்து காவல் முடிந்த நிலையில் சிதம்பரம்  நேற்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் படி முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.இதற்கு சிபிஐ தரப்பில் வாதிட்ட துஷார் மேத்தா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.  இதையடுத்து சிதம்பரத்தின் சிபிஐ காவல் இன்று  வரை … Read more

சிதம்பரத்தின் சிபிஐ காவல் நாளை வரை நீட்டிப்பு

ப. சிதம்பரத்தின் சிபிஐ காவல் மேலும் 1 நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தனர்.இதனையடுத்து கடந்த 30-ஆம் தேதி சிதம்பரம் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு செப்டம்பர் 2-ஆம் தேதி  வரை அவரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.இதனை தொடர்ந்து சிதம்பரம் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் படி முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதற்கு சிபிஐ தரப்பில் வாதிட்ட துஷார் … Read more

சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்ப உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்ப சிபிஐக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சிபிஐ காவலை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்  தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில்  விசாரணைக்கு வந்தது.அதில் சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் வாதாடினார். அப்பொழுது அவர் வாதிடுகையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்  சிதம்பரத்தை வீட்டுக்காவலில் வேண்டுமானாலும் வைத்து விசாரித்துக் கொள்ளுங்கள். சிபிஐ வழக்கில் நீதிமன்ற காவலுக்கு உத்தரவிடாதபடி தடை விதிக்க வேண்டும் .ஆனால் திகார் சிறைக்கு சிதம்பரத்தை அனுப்பிவிடாதீர்கள் என்று வாதிட்டார்.மேலும் வீட்டுக்காவலில் வைப்பது … Read more

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : இன்று சிதம்பரம் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்

இன்றுடன் சிபிஐ காவல் முடிவடையவுள்ள நிலையில் சிதம்பரம் டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கோரி சிதம்பரம் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.இதனையடுத்து சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு இடையில் தான் கடந்த 21-ஆம் தேதி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தனர்.இதனையடுத்து கடந்த 30-ஆம் தேதி சிதம்பரம் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு செப்டம்பர் 2-ஆம் தேதி  வரை … Read more

சிதம்பரத்துக்கு செப்டம்பர் 2ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு -நீதிமன்றம் உத்தரவு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்துக்கு செப்டம்பர் 2 -ஆம் தேதி வரை சிபிஐ  காவலை  நீட்டித்து சிபிஐ  நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கோரி சிதம்பரம் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.இதனையடுத்து சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு இடையில் தான் கடந்த 21-ஆம் தேதி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தனர்.இதனையடுத்து சிதம்பரம் சிபிஐ சநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 5 நாட்கள் … Read more

சிபிஐ காவலில் வைக்கப்பட்டிருந்த சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்

சிபிஐ காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.இதனையடுத்து இன்று சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.சிபிஐ தரப்பில் மேலும் ஐந்து நாட்களுக்கு சிதம்பரத்தின் காவலை நீட்டிக்க மனு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுளள்து.

ஐஎன்எக்ஸ் மீடியா  வழக்கு : சிதம்பரம் தொடர்பான ஆவணங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது அமலாக்கத்துறை

ஐஎன்எக்ஸ் மீடியா  வழக்கில் அமலாக்கத்துறை ப.சிதம்பரம் தொடர்பான ஆவணங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ  கைது செய்து விசாரணை செய்து வருகிறது .இன்றுடன் சிதம்பரத்தின் காவல் முடிய உள்ள நிலையில் டெல்லியில் உள்ள சிபிஐ  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். ஐஎன்எக்ஸ்  மீடியா வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்யாமலிருக்க தடைகோரி சிதம்பரம் தரப்பில் அமலாக்கத்துறைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கில் செப்டம்பர் 5ஆம் தேதி உத்தரவு … Read more

இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ  கைது செய்தது.பின்னர் சிதம்பரம் டெல்லியில் உள்ள  சிபிஐ  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.சிபிஐ தரப்பில் சிதம்பரத்தின் கவலை நீட்டிக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சிதம்பரத்தின் காவலை 30- ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் இன்றுடன் சிதம்பரத்தின் காவல் முடிய உள்ள நிலையில் டெல்லியில் உள்ள சிபிஐ   நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.