மீண்டும் கமல்ஹாசன் தயாரிப்பில் சியான் விக்ரம்!

உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் பட நிறுவன தயாரிப்பில் சீயான் விக்ரம் நடித்து இருந்த திரைப்படம் கடாரம் கொண்டான். இந்த படத்தை ராஜேஷ்.எம்.செல்வா இயக்கி இருந்தார். இப்படத்தில் விக்ரமின் தோற்றமும் நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் விக்ரம் மீண்டும் கமல் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படம் கமலின் கனவு படமான மருதநாயகமாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாம். கமல் தற்போது அரசியலில் பிசியாக இருப்பதால் அப்படத்தில் நடிக்க முடியாத சூழல் இருக்கிறதாம். ஆதலால் … Read more

ரசிகர்களுடன் சேர்ந்து ‘கடாரம் கொண்டான்’ கண்டுகளித்த சியான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம்!

உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் கடாரம் கொண்டான். தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இப்படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் அபிஹாசன், அக்ஸரா ஹாசன்  ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இப்படத்தின் டீசர், ட்ரெய்லர் எல்லார் ரசிகர்களை திருப்திபடுத்திம் விதமாகவும், எதிர்பார்ப்பை கூட்டும் வகையிலும் இருந்ததால் படத்திற்கு இன்று அனைத்து ஏரியாக்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன் ரசிகரான தனது … Read more

விக்ரமை இப்படி ஒரு ரோலில் நான் பார்த்தது இல்லை! படத்தில் அவர் போலிஸ்தானா?!

தமிழ் திரையுலகில் சிறந்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விக்ரம். இவரது நடிப்பு திறமையை சினிமா உலகம் வியந்து ரசிக்கும். இவர் தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் கடாரம் கொண்டான் படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் அடுத்தவாரம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை ராஜேஷ் செல்வா இயக்கி உள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீசாகி ரசிகர்களிடம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இப்படத்தை பற்றி படத்தின் எடிட்டர் கூறுகையில், ‘ படத்தில் அவர் போலீஸா என்பதை படத்தினை பார்த்து தெரிந்து … Read more

கடாரம் கொண்டான் படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியிடப்படுகிறது தெரியுமா?

நடிகர் கமலஹாசன் தயாரிப்பில், இயக்குனர் ராஜேஷ் செல்வா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் கடாரம் கொண்டான். இப்படத்தில், விக்ரம் மற்றும் அக்சராஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம், ஜூலை 19-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், ஜூலை 3-ம் தேதி இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படும் என படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து நடிகர் விக்ரம் ரசிகர்கள் ட்ரெய்லரை எதிர்பார்த்து கொண்டாட்டத்திற்காக காத்திருக்கின்றனர்.

கடாரம் கொண்டான் திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழுவினர்!

நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தற்போது இவர், இயக்குனர் ராஜேஷ்  இயக்கத்தில், கடாரம் கொண்டான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் விக்ரம் முடிந்துவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கடாரம் கொண்டான் படத்தில் விக்ரம் பாடல் பாடினார் !!!!

நடிகர் விக்ரம் இயக்குநர் ராஜேஷ் எம் .செல்வா இயக்கத்தில் தற்போது “கடாரம்கொண்டான்” படத்தில் நடித்து வருகிறார் இந்நிலையில் தற்போது விக்ரம் “கடாரம் கொண்டான்” படத்திற்காக  ஒரு பாடல் பாடியுள்ளார். நடிகர் விக்ரம் கோலிவுட் சினிமாவில் உள்ள டாப் ஹீரோக்களில் ஒருவர். இவர் தமிழ் சினிமாவில் “சேது” என்ற திரைபடத்தின் மூலம் அறிமுகமானார். அதற்கு பிறகு இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் விக்ரம் இயக்குநர் ராஜேஷ் எம் .செல்வா இயக்கத்தில் தற்போது “கடாரம்கொண்டான்” படத்தில் … Read more

ஹாலிவுட் ஸ்டைலில் கலக்கும் சியான் விக்ரம் நடிக்கும் ‘கடாரம் கொண்டான்’ பட டீசர் வெளியானது!!!

சியான் விக்ரம் சாமி இரண்டாம் பாகத்தினை தொடர்ந்து தூங்காவனம் படத்தின் இயக்குனர் ராஜேஸ் செல்வா இயக்கத்தில் கடாரம் கொண்டான் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்த படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் விக்ரம் போலிஸாக நடித்து உள்ளார். இந்த படத்தின் டீசர் இன்று பொங்கலை முன்னிட்டு வெளியானது. இதில் இடம்பெற்ற காட்சிகள் ஹாலிவுட் போல பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளன. DINASUVADU

நாளை மிரட்ட வருகிறது சியான் விக்ரமின் ‘கடாரம் கொண்டான்’ டீசர்!!

சியான் விக்ரம் சாமி இரண்டாம் பாகத்தினை தொடர்ந்து தூங்காவனம் படத்தின் இயக்குனர் ராஜேஸ் செல்வா இயக்கத்தில் கடாரம் கொண்டான் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்த படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் விக்ரம் போலிஸாக நடிக்க உள்ளார்.. இதன் டீசர்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை காலை இந்த படத்தின் டீசர் வெளியாக உள்ளது. DINASUVADU

கடாரம் கொண்டானை தொடர்ந்து துருவ நட்சத்திரத்தில் களமிறங்கிய 'சியான்' விக்ரம்!!

சாமி இரண்டாம் பாகத்தினை தொடர்ந்து சியான் விக்ரம் கடாரம் கொண்டான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை  ராஜேஸ் செல்வா இயக்கி வருகிறார். இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இந்த இரண்டு படங்களுக்கு முன்னரே கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வந்தார். இதன் டீசர் கூட எப்போதோ வெளியிடப்பட்டது. ஆனால் திடீரென படத்திற்கான ஷூட்டிங் தமாதமானது. இந்நிலையில், தற்போது வந்த தகவலின் படி, கடராம் கொண்டான் பட ஷூட்டிங் … Read more