ரமலான் நோன்பு காலத்தில் செய்யக் கூடாததை செய்த வக்கார் யூனுஷ்! ரசிகர்களிடம் பகிரங்க மனிப்பு கேட்ட வக்கார் யூனுஷ்! 

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வக்கார் யூனுஷ் ரமலான் நோன்பு காலத்தில் பிறந்தநாள் கேக் வெட்டியதற்காக  மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்த வாசிம் அக்ரமின் பிறந்தநாள் ஜூன்3ஆம் தேதி கொண்டாடப்பட்ட போது வக்கார் யூனுசும், வாசிம் அக்ரமும் கேக் வெட்டினர். ஆனால் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், கிரிக்கெட் வீரர்கள் கேக் வெட்டியதற்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதை அடுத்து தமது செயலுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ள வக்கார் யூனுஷ், … Read more

மீண்டும் கிரிக்கெட் விளையாடத் தயாரான சர்சை நாயகர்கள் ஸ்டீவ் ஸ்மித் -டேவிட் வார்னர்!

குளோபல் டி20 லீக் கிரிக்கெட் போட்டிகள் இம்மாதத்தில் கனடாவில் நடைபெறவுள்ள நிலையில்  டொராண்டோவிலிருந்து 25 மைல்கள் தொலைவில் உள்ள கிராமம் ஒன்றில் நடைபெறுகிறது. இந்த டி20 லீக் கிரிக்கெட்டில் பால் டேம்பரின் தடை பெற்ற ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் உட்பட பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஷாகித் அஃப்ரீடி, இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லஷித் மலிங்கா, மே.இ.தீவுகளின் அதிரடி வீரர்  கிறிஸ் கெய்ல், சுனில் நரைன், ஆந்த்ரே ரஸல், டேரன் சமி டிவைன் பிராவோ ஆகியோரும் … Read more

வெல்கம் டு கபடி ஸ்டைல்!என் பேரு தவான் மட்டும் இல்ல,வேற ஒரு பேரும் இருக்கு!ஷிகார் தவான் ஒபன் டாக்

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகார் தவாண்,சதம் அடித்தல், கேட்ச் பிடித்து விக்கெட் வீழ்த்துதல் ஆகிய கொண்டாட்டத்தின் போது கபடி ஸ்டைலில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதையே விரும்புகிறேன் என்று  தெரிவித்துள்ளார். முறுக்கு மீசை ஷிகார் தவாணின்  ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். ஆனால், சமீபகாலமாக அவர் சதம் அடித்தாலும், கேட்ச் பிடித்தாலும் மீசையை முறுக்கும் ஸ்டைலை அதிகமாகக் கடைபிடிக்காமல், கபடிப் போட்டியில் தொடையைத் தட்டி வீரத்தை காட்டும் ஸ்டைலை அதிகமாக பின்பற்றிவருகிறார் என்பது கவனிக்கத்தக்கது. இது குறித்து ‘பிரேக்பாஸ்ட் வித் … Read more

சுனில் சேத்ரிக்கு மருந்து அளித்த டிக்கெட்டு விற்பனை!சுனில் சேத்ரியின் கண்ணீரைத் துடைத்த மக்கள்!விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்!

மும்பை மக்கள்  இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரியின் கண்ணீரை துடைத்துவிட்டனர். இன்று இரவு நடைபெறும் கால்பந்துப் போட்டிக்கான மொத்த டிக்கெட்டுகளும்விற்றுத் தீர்ந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்பந்துப் போட்டி மும்பையில் இன்டர்கான்டினென்டல் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி, சீனாவில் சீனத் தைப்பே அணியுடன் நேற்று முன்தினம் மோதிய போட்டியில் 5-0 என்ற கோல் கணக்கில்  வெற்றிபெற்றது. இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஹாட்ரிக் கோல்கள் அடித்தார். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் போட்டியைக் காண 2500 ரசிகர்கள் … Read more

சுனில் சேத்ரி ஏக்கம் வீண் போகவில்லை!விராட் கோலிக்கு பிறகு சச்சின்டெண்டுல்கர் ,சுரேஷ் ரெய்னா,சானியா ஆதரவு!

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், ரெய்னா, டென்னிஸ் வீராங்கனை சானியா ஆகியோர் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில்  கிரிக்கெட்டைப் போல்கால்பந்து விளையாட்டுக்கும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். மும்பையில் நேற்றுமுன்தினம் இன்டர்கான்டினென்டல் கால்பந்துப் போட்டி நடந்தது. இதில் சீனாவில் சீனத் தைப்பே அணியை 5-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது. அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஹாட்ரிக் கோல்கள் அடித்தார். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த … Read more

ப்ளீஸ் ரசிகர்களே இதே கொஞ்சம் கேளுங்க!சுனில் சேத்ரிக்காக கெஞ்சிய விராட் கோலி!காரணம் என்ன தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி,இந்திய கால்பந்து அணிக்கும் ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேப்டன் சுனில் சேத்ரி உருக்கமாக ரசிகர்களிடம் பேசியதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்திய கால்பந்து அணிக்கு மக்களும்,ரசிகர்களும் ஆதரவு அளிக்க வேண்டும், இப்போது ரசிகர்களுக்குப் பிடிக்காவிட்டாலும், ஒருநாள் ரசிகர்களுக்கு ஏற்றார்போல் இந்திய கால்பந்து மாறும், களத்துக்கு வந்து ஆதரவு தாருங்கள் என்று இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ட்விட்டர் மூலம் ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த வீடியோவைப் … Read more

ரசிகர்களிடம் கெஞ்சிய இந்திய கேப்டன்!ப்ளீஸ் எங்களுக்கும் ஆதரவு தாங்க! ஒரு நாள் எல்லாமே மாறும்!

இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி  தயவுசெய்து மைதானத்துக்கு நேரில் வந்து கால்பந்து போட்டியைப் பாருங்கள், ஆதரவு தாருங்கள், இன்று இல்லாவிட்டாலும்கூட என்றாவது ஒருநாள் உங்களுக்குப் பிடித்தார்போல் இந்திய கால்பந்து மாறும் என்று கால்பந்துப் போட்டிக்கு ரசிகர்களிடம்  ஆதரவு கோரியுள்ளார். கிரிக்கெட் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் ஆதரவும், மோகமும், மற்ற விளையாட்டுகளுக்கு இருப்பதில்லை என்பது நிதர்சனம். கிரிக்கெட் வீரர்களைப் போல் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு விளம்பரம் மூலம் வருமானமும், ஊதியமும் தரப்படுவதும் இல்லை.   இதனால், … Read more

வரலாற்றில் முதல் முறையாக நடைபெறும் இந்தியா-ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியில் தினேஷ் கார்த்திக்..!

வரலாற்றில் முதல் முறையாக ஆப்கானிஸ்தான் அணி, இந்திய அணியுடன் டெஸ்ட் போட்டி ஒன்றில் வரும் ஜூன் 14-ந் தேதி விளையாட இருக்கிறது. இரு அணிகளும் மோதும் இந்த டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஜூன் 14 முதல் 18 வரை நடக்கிறது.  இதற்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் சகா இடம் பிடித்திருந்தார். இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான குவாலிபையர் 2-ல் விளையாடியபோது ஷிவம் மவி வீசிய பந்து சகாவின் வலது கை பெருவிரலை … Read more

சச்சின் ரசிகருக்கு தோனி அளித்த அதிர்ச்சி ..!

உடல் முழுவதும் இந்திய மூவர்ணக்கொடி நிறத்தை பூசிக்கொண்டு, இந்திய தேசியக்கொடியை கையில் ஏந்தியபடி, இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் அனைத்து போட்டிகளையும் காண வரும் ரசிகரான சுதிர் கவுதமை, கிரிக்கெட்டை தொலைக்காட்சியில் பார்க்கும் ரசிகர்கள், எவரும் பார்க்காமல் இருந்திருப்பது கடினம். சச்சின் தெண்டுல்கரின் தீவிர ரசிகரான சுதிர் கவுதமை சச்சின் தெண்டுல்கர் பலமுறை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை சுதீர் கவுதமை, இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான தோனி, தனது இல்லத்திற்கு நேரில் … Read more

ஒரு முறை அல்ல,6-வது முறையாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பூம் பூம் வீரர்!

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி , சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து  முழுமையாக விலகுவதாக அறிவித்தார். இவ்வாறு அப்ரிடி அறிவிப்பது 6-வது முறையாகும். ஆனால், இந்த முறை கிரிக்கெட் விளையாட இனி வரமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார். லண்டனில் நேற்று முன்தினம் நடந்த மேற்கிந்தியத்தீவுகள், ஐசிசி வேர்ல்டு லெவன் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது, அப்பிரிடிக்கு அனைத்து வீரர்களும் பிரியாவிடைகொடுத்து, மரியாதை செய்தனர். மேற்கிந்தியத் தீவுகள் நாட்டில் கிரிக்கெட் அரங்குகள் மேம்பாட்டுக்காக நடத்தப்பட்ட நலநதிக் கிரிக்கெட் … Read more