தமிழ்நாட்டில் ஏன் பாதிப்பு எண்ணிக்கை அதிகம்.? முதல்வர் விளக்கம்.!

தமிழகத்தில் 50 பரிசோதனை மையங்கள் மூலம் தினமும் 12 ஆயிரம் பேரின் பரிசோதனை மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதால் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக தெரிகிறது – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.  தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த பாதிப்பு குறித்தும், அதனை தடுக்க அரசு முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களிடையே உரையாற்றினார். அப்போது பல்வேறு தகல்வல்கள்,அறிவிப்புகளை தெரிவித்தார்.  அதில், தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளை அறிய … Read more

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆளுநரை சந்திக்கிறார் தமிழக முதல்வர்.!

இன்று மாலை 5 மணிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித்தை  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளார்.  தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அதிலும், தலைநகர் சென்னை அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித்திடம் தமிழக முதல்வர் தாக்கல் செய்ய உள்ளார். இது போல கடந்த மாதமும் … Read more

செல்போன், கணிப்பொறி, வீட்டு உபயோக பொருட்கள் பழுது நீக்கும் கடைகளுக்கு தடையில்லை.!

செல்போன், கணிப்பொறி, வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவை பழுதுநீக்கும் கடைகள் திறக்கலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகமானது, மே 4 முதல் அடுத்த 2 வாரங்களுக்கான சில தளர்வுகளை விதித்து நேற்று அறிவித்தது. அந்த தளர்வுகளை தமிழகத்தில் அமல்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டம் முடிந்து தமிழகத்திற்கான பல்வறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதில், கொரோனா பாதிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கும் பகுதிகளில் … Read more

வெளிநாட்டு நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்க்க சிறப்பு குழு.! – முதல்வர் அதிரடி.!

வெளிநாடுகளில் இருந்து வெளியேறும் வெவ்வேறு நாட்டின் நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் தொடங்க ஈர்க்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தமிழக அரசு சிறப்பு குழுவை அமைத்துள்ளது. கொரோனா தாக்கம் காரணமாக பல்வேறு நாடுகள் தொழில் வளமின்றி முடங்கி போய் உள்ளன. இதனால், பல்வேறு நாடுகள், வெளிநாடுகளில் தாங்கள் தொடரவிருந்த தொழில்களை விலக்கிக்கொண்டு அந்நாட்டிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளன. அப்படி வெளியேறும் வெளிநாட்டு நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்க்கும் பொருட்டு சிறப்பு குழுவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைத்துள்ளார். இந்த அமைப்பானது வெளிநாடுகளில் இருந்து … Read more

வரும் சனிக்கிழமை தமிழக அமைச்சரவை கூட்டம்.! ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?!

மே மாதம் 2ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கானது, வரும் மே மாதம் 3ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில், வரும் சனிக்கிழமை ( மே மாதம் 2ஆம் தேதி ) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் … Read more

உடல் அடக்கத்தை தடுத்தால் 3 ஆண்டுகள் சிறை.! – தமிழக அரசு அறிவிப்பு.!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்தால், அவர்களுக்கு குறைந்தது ஓராண்டு சிறை தண்டனை முதல் 3 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை வழங்கப்படும் – தமிழக அரசு. சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர் சைமன் உடலை கீழ்பாக்கம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்ய முற்பட்டபோது, அப்பகுதி மக்கள் போராட்டம் செய்ததை அடுத்து அவரது உடல் வேறு இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அடக்கம் செய்ய மறுத்து போராட்டத்தில் ஈடுப்பட்டதாக 40க்கும் … Read more

மருத்துவ குழுவினருடன் இன்று தமிழக முதல்வர் தீவிர ஆலோசனை.!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து, மருத்துவ குழுவினருடன்  மருத்துவ குழுவினருடன் இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகமாகி கொண்டே வருகிறது. நேற்று நிலவரபடி தமிழகத்தில் மொத்தமாக 1,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில், 635 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர். இது சற்று ஆறுதல் தரும் செய்தியாக உள்ளது. இதுவரை 18 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். தற்போது 940 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை … Read more

ஈரானில் சிக்கிதவிக்கும் 650 மீனவர்கள்.! தமிழக முதல்வர் கடிதம்.!

ஈரானில் சிக்கி தவிக்கும் 650 மீனவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்கப்பெற்ற வேண்டும் எனவும், அவர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய வெளியுறவு துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், உலக நாடுகள் பெரும்பாலானவையும் ஊரடங்கை அமல்படுத்தியதால், பொது போக்குவரத்துகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால், ஈரான் நாட்டில் மீன்பிடிக்க சென்ற  650 தமிழக மீனவர்கள் அங்கு சிக்கி தாயகம் திரும்ப முடியாமல் … Read more

முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடியது.!

தமிழகத்தில் கொரோனா நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார்.இந்த கூட்டத்தில் மருத்துவர்கள் ஊரடங்கை நீட்டிக்க கோரிக்கை விடுத்தனர். நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதியோடு ஊரடங்கு நிறைவடையும் நிலையில், இன்று மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது என முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தார்.  இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடியது. தமிழகத்தில் உள்ள அனைத்து அமைச்சர்களும் … Read more

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவது அவசியம் – முதல்வர் பழனிச்சாமி .!

இந்தியாவில் கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையெடுத்து தமிழகத்தில் அனைத்து கடைகளும் , திரையரங்கம் , சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளன.மேலும் பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வு நடத்த முடியாததால்  1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. சமீபத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்துசெய்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கவேண்டும்  என வைகோ வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையெடுத்து அமைச்சர் செங்கோட்டையன் தேர்வு ரத்து குறித்து முதல்வர்தான் … Read more