சிறப்பு அந்தஸ்து ரத்து !அரசியல் சாசன படுகொலை -குலாம் நபி ஆசாத் !

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக முக்கிய அறிவிப்பை உள்துறை அமைச்சர் அமித்ஷா  மாநிலங்களவையில்

By Fahad | Published: Apr 05 2020 12:18 AM

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக முக்கிய அறிவிப்பை உள்துறை அமைச்சர் அமித்ஷா  மாநிலங்களவையில் அறிவித்தார்.அதில்  ஜம்மு-காஷ்மீருக்கு கொடுக்கப்படும்  சிறப்பு அந்தஸ்தை  இந்திய அரசியல் சாசனத்தின் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்வதாக கூறினார். இதற்கு குடியரசு தலைவர் ரத்து செய்யும் முடிவுக்கு அனுமதி கொடுத்து உள்ளார்.இதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு மாநிலங்களவையில் காங்கிரஸ் , திமுக போன்ற கட்சிகள்  எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் மாநிலங்களவையில் பேசிய  குலாம் நபி ஆசாத்  வரலாற்று நிகழ்வுகள் மற்றும் தியாகங்கள் மறக்கடிக்கச் செய்ய மத்திய அரசு முயற்சி செய்வதாகவும் , இந்த அறிவிப்பு அரசியல் சாசன படுகொலையே என கூறி எதிர்ப்பு தெரிவித்தார்.