ரஜினிக்கு பாடம் எடுக்க வெட்கமாக இல்லையா ? ஹெச்.ராஜா வீரமணிக்கு கேள்வி

  • ரஜினி பெரியார் குறித்து பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
  • ரஜினிக்கு பாடம் எடுக்க வெட்கமாக இல்லையா என்று ஹெச்.ராஜா வீரமணிக்கு  கேள்வி எழுப்பியுள்ளார். 

அண்மையில் நடைபெற்ற துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில்,பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.மேலும்,செருப்பு மாலை அணியப்பட்டது என்று ரஜினி பேசினார்.இவ்வாறு ரஜினி பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.ஆனால் ரஜினிக்கு ஆதரவாக ஒரு சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.ரஜினியின் இந்த பேச்சிற்கு எதிராக  தமிழகத்தில் பல இடங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.இந்த விவகாரத்தில் தான் வருத்தமோ ,மன்னிப்போ கேட்க முடியாது என்று ரஜினி திட்டவட்டமாக தெரிவித்தார்.

ரஜினியின் கருத்துக்கு திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கூறுகையில்,மன்னிப்பு கேட்பதும் வருத்தம் சொல்வதும் மனிதப்பண்புக்கு அடையாளம்.ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் எப்படி நடப்பார் என்பதற்கு இதுவே முன்னோட்டம் ஆகும். ரஜினி நீதிமன்றத்தில் பதில் சொல்லும் காலம் விரைவில் வரும் என்று தெரிவித்தார்.இந்த விவகாரத்தில் ஹெச்.ராஜா ஆரம்ப முதலே ரஜினிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்.இந்நிலையில்  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக சிவகங்கையில் பாஜக பிரச்சாரம் மேற்கொண்டது.இந்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா  கலந்து கொண்டார்.இந்த பிரச்சாரம் முடிந்த பின்னர் ஹெச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,பாஜக ஆட்சியமைத்ததும் பெரியார் தொண்டு நிறுவனம் மக்களுக்கு சொந்தமானது.எனவே தொண்டு நிறுவனங்களை பொதுவுடமை ஆக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் நாகரிகமானவர்கள். ரஜினிக்கு பாடம் எடுக்க வெட்கமாக இல்லையா என்று கி.வீரமணிக்கு கேள்வி எழுப்பினார்.மேலும்  திராவிடர் கழகத்துடனான தொடர்பை முறிக்கவில்லை என்றால்  திமுக மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.