ரூ 20,000,00,00,000 இல்லை ரூ 50,000,00,00,000 கேட்கலாம்....பாஜக கூட்டணி குறித்து தம்பிதுரை கருத்து...!!

  • அதிமுக தலைமையில் பிஜேபி + பாமக கூட்டணி முடிவாகி இறுதி செய்யப்பட்டுள்ளது.

By Fahad | Published: Apr 02 2020 04:29 PM

  • அதிமுக தலைமையில் பிஜேபி + பாமக கூட்டணி முடிவாகி இறுதி செய்யப்பட்டுள்ளது.
  • அதிமுக கூட்டணியில் மத்தியில் பிஜேபி ஆட்சி செய்தால் தமிழகத்துக்கு 50,000 கோடி ரூபாய் கேட்கலாம் என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகையில் மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக_வும் , காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.மாநிலத்துக்கு மாநிலம் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்த வியூகங்களை வகுத்து வருகின்றனர். தமிழகத்தில் திமுக + காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க அதிமுக தலைமையில் பாஜக + பாமக இணைந்து பாஜக_விற்கு 5 , பாமக_விற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து இறுதிபடுத்தபட்டுவிட்டது. இந்நிலையில் கரூரில் செய்தியாளர்களை சந்தித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேசுகையில் ஜெயலலிதா முடிவையே அதிமுக எடுத்துள்ளது.கொள்கை வேறு கூட்டணி வேறு இந்த முறை அதிமுக ஆதரவில் மத்தியில் மத்திய அரசு ஆட்சியமைக்கும் தமிழகத்துக்கு தேவையான 20,000 கோடி இல்லை 50,000 கோடியை கேட்கலாம் என்று தெரிவித்துள்ளார்.