குடும்ப அரசியலால் தான் அதிமுகவில் பிரச்சனை- தம்பிதுரை எம்.பி.

அதிமுகவில் பிரச்சனை காரணம் குடும்ப அரசியல் தான் என தம்பிதுரை எம்.பி. பேச்சு. குடும்ப அரசியல் காரணமாகதான் அதிமுகவில் பிரச்சனை ஏற்பட்டது என அதிமுக எம்பி தம்பிதுரை கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் குடும்ப அரசியல், ஊழலுக்கு எதிராக அதிமுக பிரச்சாரம் மேற்கொள்ளும். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் 10 ஆண்டுக்கு முன்பு நீக்கப்பட்டோர் அவரது புகைப்படத்தை வைத்து நாடகமாடுகின்றனர். ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர்களால் அதிமுக ஒன்றிணையும் என்று எப்படி கூற முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

#Breaking:முன்னாள் அமைச்சர்கள் சந்திப்பு- ஓபிஎஸ் என்ன சொன்னார்?..!

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது.இதனிடையே,அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை வெடித்துள்ள நிலையில்,சென்னை,கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஈபிஎஸ் இல்லத்திற்கு அதிமுக மாநில மற்றும் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள்,அதிமுக எம்.பி. தம்பிதுரை,முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் வருகை புரிந்தனர்.அவர்களுடன் ஈபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டார்.அதே சமயம்,தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் அவர்களும் ஒற்றை தலைமை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். இதனிடையில்,அதிமுகவில் மொத்தம் 75 மாவட்ட செயலாளர்கள் உள்ள நிலையில்,கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களுக்கு 11 மாவட்ட செயலாளர்கள் … Read more

தமிழக மீனவர்கள் உயிழப்பு., மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? – அதிமுக எம்.பி. தம்பிதுரை

தமிழக மீனவர்களை கொன்ற இலங்கை கடற்படையை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என்று அதிமுக எம்.பி.தம்பிதுரை தெரிவித்துள்ளார். டெல்லி நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் பேசிய அதிமுக எம்.பி. தம்பிதுரை, இந்திய மீனவர்கள் கொல்லப்படுவதற்கு, இலங்கையை மத்திய அரசு வன்மையாக கண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததை அடுத்து, இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்று கேள்வியும் எழுப்பியுள்ளார். இலங்கை கடற்படையின் அத்துமீறலை தடுக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை இலங்கை கடற்படையால் 245 … Read more

#BREAKING: பிரதமர் மோடியுடன் தம்பிதுரை எம்பி சந்திப்பு.!

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்தார் அதிமுக எம்பி தம்பிதுரை. பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு பிரதமர் மோடியை சந்தித்து நன்றி தெரிவித்தேன் என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார். கரூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சாலை திட்டங்கள் அறிவிக்கப்பட்டதற்கு நன்றி கூறியதாக குறிப்பிட்டுள்ளார். சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்துள்ள நிலையில், பிரதமர் மோடியை, தம்பிதுரை சந்தித்தது முக்கியத்துவம் பெறுகிறது. இதனிடையே இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் … Read more

துணை முதல்வர் பன்னீர்செல்வத்துடன் தம்பிதுரை சந்திப்பு

துணை முதல்வர் பன்னீர்செல்வத்துடன் அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை சந்தித்துள்ளார். அதிமுக செயற்குழுக்கூட்டம் அக்கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என நீண்ட நாட்களாக கேள்வி வந்த நிலையில் ,அக்டோபர் 7-ஆம் தேதி அதிமுகவின் முதமைச்சர் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.ஆனால் இந்த செயற்குழு கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இடையே முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக முரண்பாடு எழுந்ததாக தகவல் வெளியானது. இதனையடுத்து சென்னை … Read more

கரூரில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய மு.தம்பிதுரை

இன்று கரூர் மக்களவை தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளர் மு.தம்பிதுரை தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். கோடாங்கிபட்டி பட்டாளம்மன் கோவிலில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்கி மக்களிடம் வாக்குகள் சேகரித்து வருகிறார். இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.மக்களவை தேர்தல்  தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது, இம்மாதம் 26-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும். அ.தி.மு.க கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் … Read more

பாஜகவினரை நானும் எதிர்த்து வந்தேன்-தம்பிதுரை

மக்களவை தேர்தலில் தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு இழுக்க ஒவ்வொரு கட்சியும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றது. பாஜகவினர் அதிமுகவை விமர்சித்த வந்ததால் தான் நானும் அவர்களை எதிர்த்து வந்தேன் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக  பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக. இந்நிலையில் கரூரில்  பாஜக … Read more

ரூ 20,000,00,00,000 இல்லை ரூ 50,000,00,00,000 கேட்கலாம்….பாஜக கூட்டணி குறித்து தம்பிதுரை கருத்து…!!

அதிமுக தலைமையில் பிஜேபி + பாமக கூட்டணி முடிவாகி இறுதி செய்யப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் மத்தியில் பிஜேபி ஆட்சி செய்தால் தமிழகத்துக்கு 50,000 கோடி ரூபாய் கேட்கலாம் என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகையில் மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக_வும் , காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.மாநிலத்துக்கு மாநிலம் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்த வியூகங்களை வகுத்து வருகின்றனர். தமிழகத்தில் திமுக + காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க அதிமுக தலைமையில் பாஜக … Read more

டிரைலர் நன்றாக இருந்தாலும், சில நேரங்களில் படம் ஓடாது…மோடியை தாக்கிய தம்பிதுரை…!!

டிரைலர் நன்றாக இருந்தாலும், சில நேரங்களில் படம் ஓடாமல் போய்விடுகிறது என   மக்களவை துணைசபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம்,நாகையங்கோட்டை ஒன்றியத்தில் ஊர் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கியபின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பிரதமர் மோடி இடைக்கால பட்ஜெட்டை, வெறும் டிரைலர் தான் என கூறியது பற்றி, தம்பிதுரை விமர்சித்தார்.  கடந்த  5 ஆண்டுகளில் மத்தியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்களில், தமிழகத்துக்கு பெரும் பலன் கிடைக்கவில்லை என குற்றம்சாட்டினார்.

40 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றும்…தம்பிதுரை உறுதி…!!

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என அமைச்சர் தம்பிதுரை உறுதியாக கூறியுள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகின்றது.இந்த விசாரணை ஆணையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகி தனது கருத்தை கூறி இருந்தார்.இந்த நிலையில் இன்று அதிமுகவின் மக்களவை உறுப்பினர் தம்பிதுரை விசாரணை ஆணையத்தில் ஆஜராகினர். சென்னை எழிலகத்தில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகியா கிய பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய  க்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் … Read more