சிறப்பு ரயில் இன்று தொடக்கம் !!!

தாம்பரம்- செங்கோட்டை இடையேயான சிறப்பு ரயில் இன்று தொடக்கம்

அந்தியோதயா சிறப்பு ரயில், தாம்பரம்- செங்கோட்டை இடையேயான  சேவையை  இன்று முதல் தொடங்கியது.

நெல்லை மாவட்டத்தை மையமாக கொண்டு, கடந்த நவம்பர் மாதம் வெளியான ரயில்வே கால அட்டவணையில்  சென்னைக்கு இரு அந்தியோதயா ரயில்கள் ரயில்கள் அறிவிக்கப்பட்டன.

இவ்விரு அந்தியோதயா ரயில்களும் முழுக்க முழுக்க முன்பதிவற்ற பெட்டிகளை கொண்டிருக்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்திருந்தது.

நெல்லை, நாகர்கோவில் போன்ற நகரங்களுக்கு தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மட்டுமே முன்பதிவற்ற சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் இத்தகைய ரயில் தினசரி ரயிலாக இயக்கப்படும் என்கிற அறிவிப்பு பயணிகளுக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளித்தது.

இன்ஜின் கோளாறு ஏற்பட்டதையடுத்து, சேவை தொடங்கிய முதல் நாளே  சிறப்பு ரயில் 20 நிமிடங்கள் தாமதமாக சென்றது. மேலும் இந்த சிறப்பு ரயில், மார்ச் 5,7,12,14 ல் தாம்பரத்தில் காலை 7 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம், சிதம்பரம், கும்பகோணம், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை வழியாக அருப்புக்கோட்டை,விருதுநகர்,சிவகாசி, ராஜபாளையம் வழியாக இரவு 10 மணிக்கு செங்கோட்டைக்கு சென்றடையும்.

மறு மார்க்கமாக மார்ச் 6, 8, 13, 15 ல் செங்கோட்டையில் காலை 6 மணிக்கு புறப்பட்டு ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சி, கும்பகோணம் வழியாக தாம்பரத்திற்கு இரவு 10 மணிக்கு வந்தடைகிறது. இந்த ரயில் பெட்டியில் பயோ டாய்லெட், ரயிலில் குடிநீர் வசதி, செல்போனை சார்ஜ் செய்யும் வசதி, தீயணைக்கும் கருவிகள்,  என பல வசதிகளைக் கொண்டுள்ளது. மேலும் அந்தியோதயா ரயில்கள் பகல் நேரங்களில் இயக்கப்படுவதால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தென்மாவட்ட பயணிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

மேலும் தகவல்களுக்குஇணைந்திடுங்கள் தினச்சுவடு

author avatar
Dinasuvadu desk

Leave a Comment