உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி

2019 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு தொகுதி மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு கட்சிகள் தேர்தலுக்கான தீவிர செயற்பாட்டில் இறங்கியுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்காக  கட்சிகள் கூடுதல் தீவிரம் காட்டி வருகின்றது.

அதிமுக -திமுக இருபெரும் கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்காண தொகுதிகள் பெயர்களை பட்டியலிட்டு வெளியிடப்பட்டன.

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில்  காங்கிரஸ் -மதிமுக – விசிக – மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் – இந்திய கம்யூனிஸ்ட் – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி -ஐஜேகே ஆகிய கட்சிகள் உள்ளது.

Image result for வைகோ ஸ்டாலின்

இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவிற்கு ஈரோடு தொகுதி வழங்கப்பட்டது. மதிமுக கட்சியின் பொதுச் செயலாளரான வைகோ தொகுதிக்கான வேட்பாளரை  அறிவித்தார்.அதன்படி  ஈரோடு மக்களவைத் தொகுதியில் மதிமுக சார்பில் கணேசமூர்த்தி போட்டியிடுகிறார்.அதேபோல்  மதிமுகவின்  மக்களவை தேர்தலுக்கான அறிக்கையும் வெளியிடப்பட்டது.

ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி தனிச்சின்னத்தில் போட்டி என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.அதேபோல் தேர்தல் அதிகாரி ஒதுக்கும் சின்னத்தில் கணேசமூர்த்தி ஈரோட்டில் போட்டியிடுவார் என்றும்  வைகோ அறிவித்தார்.

இந்நிலையில் ஈரோடு தொகுதி மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மொடக்குறிச்சியில் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மதிமுகவிற்கு தனி சின்னம் தேர்தல் ஆணையம் ஒதுக்காத நிலையில் வைகோ உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Comment