மெதுவாக தட்டி தடுமாறி ரன் சேர்க்கும் டெல்லி அணி! ஷிகர் தவான், காலின் இங்ராம் அதிரடி !!

  • டெல்லி அணி 14 ஓவர்களில் 115 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ஆடிவருகிறது

மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி தற்போது மும்பை மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது .டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் ப்ரீத்திவ் ஷா ஆகியோர் களமிறங்கினர். இளம் ப்ரீத்திவ் ஷா 7 ரன்னில் வெளியேறினார். அதனை தொடர்ந்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 16 இல் வெளியேறினார். பின்னர் ஷிகர் தவான் மற்றும் காலின் இங்ராம் ஆகியோர் ஜோடி சேர்ந்து ஓரளவிற்கு நன்றாக ஆடினார். காலின் இங்ராம் 32 பந்துகளில் 46 ரன்கள் அடித்து வெளியேறினார். ஷிகர் தவான் தற்போது வரை 42 ரன்களுக்கு ஆடிவருகிறார். ரிஷப் பண்ட் 5 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

author avatar
Srimahath

Leave a Comment