கொல்கத்தா vs ஹைதராபாத்: பரபரப்பான இறுதி ஓவரில் கொல்கத்தா அபார வெற்றி

ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டியில் கொல்கத்தா அணி அபார வெற்றி.

டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார் கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்.

கேன் வில்லியம்சன் காயம் காரணமாக வெளியேறியதால், புவனேஷ்வர் குமார் கேப்டன் பொறுப்பேற்றார்.

துவக்க வீரர்களாக களமிறங்கிய வார்னர் மற்றும் பேர்ஸ்டாவ் இருவரும் அணிக்கு அபாரமான துவக்கத்தை கொடுத்தனர்.

பேர்ஸ்டாவ் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய வார்னர் அரைசதம் அடித்தார். துரதிஷ்டவசமாக, சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார். ரஸ்ஸல் வீசிய பந்தில் 85 ரன்களுக்கு அவுட் ஆனார். இதில் 3 சிக்ஸர் மற்றும் 9 பவுண்டறிகள் அடங்கும்.

பதான் 1 ரன்களுக்கு அவுட் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.

அதிரடியாக ஆடிய விஜய் ஷங்கர் 24 பந்துகளில் 40 எடுத்தார். மனிஷ் பாண்டே 8 ரன்களுடன் களத்தில் இருந்தனர். 20 ஒவர்கள் முடிவில் 3 விக்கெடுகள் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத்.

182 எடுத்தால் வெற்றி என களமிறங்கிய கொல்கத்தா அணியில் லின் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் அற்புதமாக ஆடிய ராணா மற்றும் உத்தப்பா இருவரும் ரன் குவிப்பில் ஈடுபட்டனர். உத்தப்பா 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து கேப்டன் கார்த்திக் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றினார். ராணா 68 ரன்கள் எடுத்து ரஷீத் கான் பந்தில் ஆட்டமிழந்தார். 4 ஓவர்களுக்கு 59 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் ரஸல் தனது அதிரடியால் அணிக்கு ரன்களை வெகு விரைவாக குவித்தார். இறுதி ஓவரில் 13 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இளம் வீரர் சுப்மன் கில் 2 சிக்ஸர்கள் அடித்து வெற்றி தேடி தந்தார்.

19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரஸல் 19 பந்தில் 49 ரன்கள் எடுத்தார்.

author avatar
Vignesh

Leave a Comment