உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு - மு.க.ஸ்டாலின் ஆலோசனை

உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மூன்று

By venu | Published: Dec 02, 2019 06:12 PM

உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மூன்று வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில் தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில் இன்று டிசம்பர் 27-ஆம் தேதி மற்றும் டிசம்பர் 30 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது .ஆனால் மாநகராட்சி,நகராட்சி ,பேருராட்சி தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நிலையில் உள்ளாட்சி தேர்தல் அறிவித்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .இந்த ஆலோசனையில் துரைமுருகன், ஆர்.எஸ் பாரதி, கே.என் நேரு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
Step2: Place in ads Display sections

unicc