உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த அதிமுக திட்டம் - மு.க.ஸ்டாலின் பேட்டி

உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த அதிமுக திட்டமிட்டு வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 

By venu | Published: Nov 15, 2019 02:05 PM

உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த அதிமுக திட்டமிட்டு வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த 3 வருடத்திற்கு மேலாக நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது இந்த ஆண்டு டிசம்பர் மாதம் உள்ளாட்சித்  தேர்தல் நடைபெறவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகி வருகின்றது.இந்த நிலையில் இன்று சென்னை குளத்தூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நாங்கள் நீதிமன்றம் சென்றோம்.தேர்தலை நிறுத்த வேண்டும் என்பது திமுகவின் நோக்கம் அல்ல. மேலும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என்று அதிமுக திட்டமிட்டு வருகிறது. எந்த நேரத்தில் உள்ளாட்சி தேர்தல் வந்தாலும் திமுக சந்திக்க தயார் என்றும் தெரிவித்துள்ளார்.  
Step2: Place in ads Display sections

unicc