2022-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு நடவடிக்கை! முழுமையான கடைசி பட்ஜெட்….

நாடாளுமன்றத்தில் 2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார்  மத்திய  நிதியமைச்சர் அருண்ஜெட்லி .

பட்ஜெட்டை தாக்கல் செய்து அருண்ஜேட்லி வாசித்து வருகிறார்.

ஜிஎஸ்டி முறை மூலம் மறைமுக வரி விதிப்பு முறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது

மே 2014-ல் பாஜக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததில் இருந்து இந்திய பொருளாதாரம் சிறப்பாக உள்ளது

அடிப்படையான பொருளாதார கட்டமைப்பு சீர்திருத்தங்களை அரசு மேற்கொண்டுள்ளது

8 சதவீதத்திற்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது

உலகிலேயே 5ஆவது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா விரைவில் மாறும்

தொழில்-வணிகம் செய்வதற்கு எளிமையான நாடுகள் பட்டியலில் இந்தியா முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடித்தது ஒரு முக்கியமான முன்னேற்றம்

வேளாண் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது

நலத்திட்ட உதவிகளை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக செலுத்துவதால் ஊழல், முறைகேடுகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன

2022-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது

இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்வதில் வெளிப்படையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன

இந்தியாவின் இயற்கை வளங்கள் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் ஏலம் விடப்படுகின்றன

டிஜிட்டல் பரிவர்த்தனைகளால் ஏழைகளை மானியம் நேரடியாக சென்று சேர்கிறது

இந்திய பொருளாதாரத்தில் அடிப்படை சீரமைப்பு பணிகளில் மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது

ஏழ்மையை நாட்டில் இருந்து விரட்ட வேண்டும் என்பது தான் மோடி அரசின் நோக்கம்

வேளாண்மை, கிராம மேம்பாடு, சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பு போன்றவற்றை மையப்படுத்தி இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல்

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியா விரைவில் 5வது இடத்திற்கு முன்னேறும்

8 விழுக்காடு ஒட்டு மொத்த வளர்ச்சி என்ற இலக்கை நோக்கி இந்தியா முன்னேறுகிறது

2.5 லட்சம் கோடி அமெரிக்க டாலர் மதிப்பு கொண்டதாக இந்திய பொருளாதாரம் உருவெடுத்துள்ளது

நாட்டின் உற்பத்தி துறை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது வேகம் எடுத்துள்ளது

வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையை மோடி அரசு மிகச்சிறப்பான முறையில் அதிகரிக்கச் செய்துள்ளது

உலகின் 7வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது

நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மோடி அரசு நிறைவேற்றியுள்ளது

நாட்டின் ஏற்றுமதி 15 விழுக்காடு அளவிற்கு உயரும் என்று எதிர்பார்க்கிறோம்

வேளாண் உற்பத்தியை மேம்படுத்த வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது

செலவு செய்யும் தொகையில் 1.5 மடங்கு வருமானத்தை விவசாயிகள் பெற வேண்டும் என்பதே இலக்கு

சீரமைப்பு நடவடிக்கைகளால் பொருளாதார வளர்ச்சி வேகமெடுத்துள்ளது

அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு கடுமையாக உழைத்து வருகிறோம்

வேளாண் உற்பத்தி கடந்த நிதி ஆண்டில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்தது

வேளாண்மை மற்றும் ஊரகப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதாக இந்த ஆண்டு பட்ஜெட் அமையும்

வேளாண் துறை மேம்பாட்டிற்கு 2000 கோடி ரூபாய் ஒதுக்கீடு

விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க மாநில அரசுகளுடன் நிதி ஆயோக் இணைந்து செயல்படும்

வரும் காரிஃப் பருவத்திற்கான குறைந்த பட்ச ஆதார விலையை 150 சதவீதம் உயர்த்துகிறோம்

உணவுப்பதப்படுத்துதல் துறைக்கு ரூ.1400 கோடி நிதி ஒதுக்கீடு

வேளாண் பொருட்களுக்கான ஏற்றுமதி விதிமுறைகளை எளிமையாக்க நடவடிக்கை

வேளாண் சந்தைகளை உருவாக்க, ரூ.2000 கோடியில் வேளாண் சந்தை மேம்பாட்டு நிதி உருவாக்கப்படும்

மூங்கில் வளர்ப்பை ஊக்குவிக்க ரூ.1290 கோடி ரூபாய் ஒதுக்கீடு

இந்திய வேளாண் பொருட்கள் ஏற்றுமதி துறை 100 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டது

கால்நடை வளர்ப்போர், மீனவர்களுக்கு கிசான் கிரடிட் கார்டுகள் வழங்கப்படும்

கரீஃப் பருவத்திற்கு குறைந்த பட்ச ஆதார விலை, உற்பத்திச் செலவிலிருந்து 1.5 மடங்காக நிர்ணயிக்கப்படுகிறது

மீனவர்கள் மற்றும் கால்நடைகள் வளர்ப்போர் மேம்பாட்டிற்கு ரூ.10000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுள்ளது .

டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த புதிய செயல் திட்டம் வகுக்கப்படும் என்றும் இயற்கை விவசாயத்தை மேம்படுத்த மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது.விவசாயக்கடன்களை 11 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

8 கோடி கிராம பெண்களுக்கு இலவச எல்.பி.ஜி இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்..வரும் நிதி ஆண்டில் 2000 கோடி கழிவறைகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேசிய வாழ்வாதார திட்டத்திற்கு ரூ.5750 கோடி ரூபாய் ஒதுக்கீடு மற்றும் நாடு முழுவதும் கழிவறைகள் கட்ட ரூ.2000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.

தேசிய ஊரக பகுதி சாலை திட்டம் மூலம் சுமார் 3.21 கோடி பேருக்கு வேலை வழங்க முடிவு

4 கோடி வீடுகளுக்கு மின் இணைப்பை இலவசமாக வழங்க முடிவெடுத்துள்ளோம் என்றும் மாணவர்களுக்கு கல்வியை நவீன முறையில் வழங்க ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படும் என கூறினார் .

கல்வி கற்பிக்கும் முறையை கரும்பலகையில் இருந்து டிஜிட்டல் மயமாக்க திட்டம் மற்றும்  குஜராத் மாநிலம் வதோதராவில் ரயில்வே பல்கலைக்கழகம் அமைக்கத் திட்டம்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள் .

Leave a Comment