நீரவ் மோடியின் பெயர் ஃபோர்ப்ஸ் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இருக்கா?இல்லையா?

நீரவ் மோடியின் பெயர்,  ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் கடந்த ஆண்டு இடம் பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு பட்டியலில் இடம் பெறவில்லை.

கடந்த 2017ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் பத்திரிகை  வெளியிட்ட உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் நீரவ் மோடியின் பெயர் இடம் பிடித்து இருந்தார். சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களுடன் அவரது பெயர் உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் கடந்த ஆண்டு ஆயிரத்து 67வது இடத்தில் இருந்தது. இந்நிலையில், 2018ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் அவரது பெயர் இடம் பெறவில்லை. இதுபோலேவே பீட்சா நிறுவனர் ஜான் ஸ்னாட்டர் (John Schnatter), தென் ஆப்பிரிக்க பெரும் பணக்காரர் கிறிஸ்டோஃபெல் (Christoffel ), சவுதி அரேபியா இளவரசர் அலாவுதீன் பின் தலால் ஆகியோர் பெயரும் இந்த ஆண்டு பட்டியலில் இடம் பெறவில்லை.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment