கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு ! வழக்கினை வாபஸ் பெற தமிழிசை முடிவு

கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற அனுமதிக்க கோரி தமிழிசை மனு தாக்கல்

By venu | Published: Sep 23, 2019 11:28 AM

கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற அனுமதிக்க கோரி தமிழிசை மனு தாக்கல் செய்துள்ளார். தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை தோல்வி அடைந்தார் .ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட  திமுக வேட்பாளர் கனிமொழி  வெற்றி பெற்றார். தூத்துக்குடியில் கனிமொழி வெற்றிபெற்றதை   அவரை எதிர்த்துபோட்டியிட்ட முன்னாள்  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அவரது மனுவில் , தேர்தல் பிரசாரத்தின் போது. ஆரத்திக்கு பணப்பட்டுவாடா செய்த ஆதாரங்கள் இருக்கின்றது என்று தெரிவிக்கப்பட்டது.மேலும்  வாக்குகளை விலை கொடுத்து வாங்கியதால், அவரது வெற்றியை செல்லாது என்று  அறிவிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற அனுமதிக்க கோரி தமிழிசை மனு தாக்கல் செய்துள்ளார்.தெலுங்கானாவின் ஆளுநராக பதவி ஏற்ற நிலையில் வழக்கை தொடர விரும்பவில்லை என்று தமிழசை தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. மனு குறித்து கருத்து தெரிவிக்க ஏதுவாக, உரிய நோட்டிசை அரசிதழில் வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது . மனு மீதான விசாரணை அக்டோபர் 14-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது உயர்நீதிமன்றம்.
Step2: Place in ads Display sections

unicc