விண்ணை முட்டும் வெங்காயத்தின் விலை! எதனால் இந்த அசுர விலையேற்றம்?!

இந்தியர்களின் சமையலில் வெங்காயத்தின் பயன்பாடு மிகவும் அதிகமாகும். தற்போது வெங்காயத்தின் விலை ஒரு கிலோ 70 முதல் 80 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. இந்த அளவுக்கு விலையேறியதால் சாமானியர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

வெங்காயத்தை விளைவிக்கும் பிரதான மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடகம், ஆந்திரா, குஜராத், கிழக்கு ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தொடர் மழை பெய்து வந்ததால் அங்கு விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்ட்டுள்ளதாம். இதனால் வெங்காயம் உற்பத்தி மிகவும் குறைந்து போனது. இதன் எதிரொலியாக சென்ற வாரம் வெங்காயத்தின் விலை சென்னையில் 38 ரூபாயும், கொல்கத்தாவில் 48 ரூபாயும், டெல்லியில் 57 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இந்த வாரம் 70 முதல் 80 ரூபாய் என உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றம் மேலும் அதிகரிக்கும் என கூறிவருகின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.