குடியுரிமை சட்டத்துக்கு எதிரான பேரணி- கமலுக்கு திமுக நேரில் அழைப்பு

  • குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வரும் 23-ம் தேதி திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் சென்னையில் பேரணி நடைபெறுகிறது. 
  • குடியுரிமை சட்டத்துக்கு எதிரான பேரணியில் பங்கேற்க கமலுக்கு திமுக நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிரது.இந்த சட்டம் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது .இதன் பின்பு ஸ்டாலின்  கூறுகையில் ,குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக டிசம்பர் 23ஆம் தேதி பிரம்மாண்ட பேரணி நடைபெறுகிறது.இந்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்குக் கமலுக்கும் அழைப்பு விடப்படும் .திமுகவின் கூட்டம் குறித்து கமல்ஹாசன் என்னிடம் பேசினார். அவரிடம் நான் குடியுரிமை சட்டம் குறித்து விவாதித்தேன் என்று தெரிவித்தார்.

பின்பு மக்கள் நீதி மமய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறுகையில், சட்டங்கள் மக்களுக்கு பயன்படவில்லை எனில் அவை மாற்றப்பட வேண்டும்.குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக நடத்தும் பேரணியில் தன் கட்சி பங்கேற்கும் என்று தெரிவித்தார்.இந்நிலையில் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான பேரணியில் பங்கேற்க கமலுக்கு திமுக நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான பேரணியில் பங்கேற்குமாறு நேரில் சென்று மக்கள் நீதி மய்யம் தலைவர்கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்தார் திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி.