தீபாவளியை முன்னிட்டு அடுத்தடுத்து வெளியாக உள்ள தமிழ்படங்கள்! பிகில் - சங்கத்தமிழன் - கைதி ரிலீஸ் அப்டேட்ஸ்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர், நடிகர் விஜய். இவர் தற்பொழுது அட்லீ

By surya | Published: Oct 09, 2019 05:02 PM

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர், நடிகர் விஜய். இவர் தற்பொழுது அட்லீ இயக்கிய பிகில் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தில் இசைப்புயல் A.R.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை கல்பாத்தி S. அகோரம் தயாரித்து துள்ளார். இந்த படம், தீபாவளிக்கு வெளிவரவுள்ளது. Image result for பிகில் அதேபோல விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் படம், தீபாவளிக்கு வெளிவரவுள்ளது. இந்த படத்தில் கதாநாயகிகளாக நிவேதா பெத்துராஜ் மற்றும் ராசிகன்னா ஆகியோர் நடித்தனர். இப்படத்தை ஸ்கெட்ச் பட இயக்குனர் விஜய் சுந்தர் இயக்கினார். Image result for சங்கத்தமிழன் படம் மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம், கைதி. இப்படத்தில் கார்த்தி நடித்துள்ளார். முழுக்க முழுக்க ஆக்ஷனை மையமாக கொண்ட இந்த படத்தில் கதாநாயகி கிடையாது. இந்த படமும் தீபாவளிக்கு வெளிவரவுள்ளது. Image result for கைதி படம் இந்த படங்கள், தீபாவளி அன்று வெளிவரும் என எதிர்பார்க்கப்ட்டுள்ளது. ஆனால் விநியோகிஸ்தர்கள் பிகில் வெள்ளிக்கிழமையும், சங்கத்தமிழன் சனிக்கிழமையும், கைதி ஞாயிற்றுக்கிழமையும் வெளியாவது குறித்து அந்தந்த படக்குழுவினர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். விரைவில் இம்மூன்று படங்களின் ரிலீஸ் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Step2: Place in ads Display sections

unicc