துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பாரத ஜனதா அரசு பொறுப்பேற்க வேண்டும்-பிரியங்கா காந்தி

உத்திரபிரதேசத்தில் உள்ள சோன்பத்ரா பகுதியில் இருபிரிவினருக்கு இடையே நடந்த சொத்து தகராறில் ஒருவரை ஒருவர் சுட்டு கொண்டனர்.இந்த சம்பவத்தில் 10-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர்.அதில் பலர் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களை பார்க்க பிரியங்கா காந்தி நேற்று சென்றார்.ஆனால் அப்பகுதியில் 144 தடை விதிக்கப்பட்டதால் பிரியங்கா காந்தியை சோன்பத்ரா பகுதியில் தடுத்து நிறுத்தினர்.

Image result for Priyanka Gandhi

இதை தொடர்ந்து பிரியங்கா காந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.இதனால் பிரியங்கா காந்தி கைது செய்து மிர்சாபூரில் தங்கவைக்கப்பட்டார்.பாதிக்கப்பட்டவர்களை பார்த்த பிறகே மிர்சாபூரை விட்டு செய்வதாக கூறி இரவு முழுவதும் அங்கேயே தங்கி இருந்தார். பின்னர் 24 மணி நேரத்திற்கு பிறகு பிரியங்கா காந்தியை பாதிக்கப்பட்டவர்களை பார்க்க அனுமதி கொடுக்கப்பட்டது.

Image result for Priyanka Gandhi

இதை தொடந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பிரியங்கா காந்தி  பாதிக்கப்பட்ட குடுப்பத்திற்கு தலா ரூ 10 லட்சம் வழங்குவதாக கூறினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரியங்கா காந்தி சோன்பத்ரா பகுதியில் நடந்த கோர சம்பவத்திற்கு பாரத ஜனதா அரசும் , உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் பொறுப்பேற்க வேண்டும் என கூறினார்.

author avatar
murugan