சரிவிலிருந்து மீளுமா ஆப்பிள் நிறுவனம்..!

 

ஆப்பிளின் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர், அமேசானின் எக்கோ மற்றும் அலெக்ஸா நிறுவனங்களுக்கு போட்டியாக  கடந்த ஜனவரி மாதம் விற்பனைக்கு வந்தது .

இதன் சிறப்பான ஒலியின் தரம் போன்று , போட்டியாளர்களை விட தரமான பொருட்களை கட்டமைத்ததால் தாமதமாக விற்பனைக்கு வந்ததாக கூறுகிறது ஆப்பிள். இந்த ஹோம்பாட் சிறப்பாக செயல்பட்டாலும், 349டாலர் (ரூ22,800) என்ற அதீத விலையின் காரணமாக மக்களை ஈர்க்க தவறிவிட்டது.

 மார்ச் மாத இறுதியில்,தனது விற்பனை முன்னறிவிப்பை குறைத்து, ஹோம்பாட் தயாரிப்பாளரான இன்வென்டிக் கார்ப் ன் ஆர்டர்களையும் குறைத்து விட்டது. விற்பனைக்கு வரும் முன் கிடைத்த பீரி-ஆர்டர்களை பார்த்தபோது, ஹோம்பாட் ஹிட் என தெரிந்தது. ஆனால் கடைகளில் விற்பனைக்கு வந்த போது , விற்பனை அவ்வளவு சூடுபிடிக்கவில்லை.

ஹோம்பாட்-ன் முதல் 10 வார விற்பனையில், அது 10% ஸ்மார்ட் ஸ்பீக்கர் சந்தையை வைத்திருந்தது. அதே சமயம், அமேசானின் எக்கோ 73%ம், கூகுள் ஹோம் 14% ம் சந்தையில் உள்ளது. விற்பனைக்கு வந்த 3வாரத்திற்கு பின், வாராந்திர சராசரி விற்பனை 4% சரிந்துவிட்டது. ஆப்பிள் ஸ்டோர் ஊழியர்கள் கூறுகையில், சில இடங்களில் தினமும் 10 ஹோம்பாட் கூட விற்கப்படுவதில்லை என்கின்றனர். ஆனால் ஆப்பிள் நிறுவனம் இதை மறுத்துள்ளது.

அமேசான் எக்கோ மற்றும் கூகுள் ஹோம் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் , கேள்விகளுக்கு பதில் சொல்லும், பிட்சா ஆர்டர் போன்ற நிறைய வசதிகள் பெற்றுள்ள நிலையில் ஆப்பிள் ஹோம்பாடிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கலாம்.

அதே நேரம் விலை மட்டும் மற்ற ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை விட 200 டாலர் அதிகம் என்கிறார் ஆப்பிளின் முன்னாள் அனலிஸ்ட் சன்னோன் க்ராஸ்.  தேவையான அனைத்தையும் இணைத்து அமேசான் எக்கோவிற்கு வலுவான போட்டியாளராக இருந்திருக்க வேண்டிய நிலையில், சிரி மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரை மட்டும் இணைத்து ‘ஏர்பாட்’ போல ஹோம்பாட்-ஐ மாற்றிவிட்டது.

அனைத்துவித பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு இந்த வசதிகள் இந்த ஆண்டிற்குள் கிடைக்கும் என்கிறது ஆப்பிள். பீரி ஆர்டரின் போது 72% ஸ்மார்ட் ஸ்பீக்கர் சந்தையை பிடித்த ஹோம்பாட், பிப்ரவரி மார்ச் மாதங்களில் 19% ஆக குறைந்துவிட்டது. அதே நேரம், அமேசான் 68%, கூகுள் ஹோம் மற்றும் சோனால் முறையை 8% மற்றும்5% ஆக இருந்தது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment