” +2 முடிப்பதற்குள் 5 பொது தேர்வு ” 5, 8_ஆம் வகுப்பு பொது தேர்வை இரத்து செய்ய ஸ்டாலின் வேண்டுகோள்…!!

  • 5 மற்றும் 8_ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்த மத்திய அரசு திட்ட வகுத்தது.
  • இந்த ஆண்டு முதல் தமிழகத்தில் 5 மற்றும் 8_ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை.
  • ஒரு மாணவன் +2 முடிப்பதற்குள் 5 பொது தேர்வை எதிர்கொள்கின்றான் எனவே 5 மற்றும் 8_ஆம் வகுப்புக்கு  வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய அரசு 5 மற்றும் 8_ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்தலாம் என்றும் மேலும் இதில் தோல்வியடையும் மாணவர்களுக்கு அடுத்த இரண்டு மாதங்களில் மறுதேர்வு நடத்த வேண்டும் என்று ஒரு புதிய சட்ட திட்டத்தை கொண்டு வந்தது.மேலும் 5 மற்றும் 8_ஆம் வகுப்பு பொது தேர்வு குறித்து மாநில அரசுக்கள் முடிவெடுத்துக்கொள்ளலாம்  எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி இந்த ஆண்டே  5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்த தயார் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்துக்கும் சுற்றரிக்கை அனுப்பியுள்ளது.மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் ஏதும் கிடையாது என்றும் தனியார் பள்ளிகளில் 5ஆம் வகுப்பு என்றால் 50 ரூபாயும் , 8_ஆம் வகுப்பு என்றால் 100 ரூபாயும் என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து தமிழக எதிர்க்கட்சித்தலைவர் முக.ஸ்டாலின் தெரிவிக்கையில் ,கிராமத்து மாணவர்கள்-களின் கல்வியை தடுக்க மத்திய அரசு திட்டம் திட்டியுள்ளது.மாணவர்களுக்கு நெருக்கடி சுமத்துவது கல்வி உரிமைச் சட்டத்துக்கு எதிரானது.மத்திய அரசின் திட்டத்தை அதிமுக அரசு செய்தால் அது மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். பிளஸ் டூ முடிப்பதற்குள் ஒரு மாணவன் 5 எழுதவேண்டுள்ளது.எனவே 5 மற்றும் 8_ஆம் வகுப்பு பொது தேர்வு நடத்தும் நடைமுறையை அரசு கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment