234-தொகுதியும் சைலண்டா இருக்கணும், 2021ல் நாங்க தான் இருக்கணும்.! மாஸ்டருக்கு ஆப்பு வைத்த ரசிகர்கள்.!

  • பொங்கலை முன்னிட்டு வெளியான விஜயின் மாஸ்டர் படத்தின் 2-வது போஸ்டரில் கருப்பு நிற சட்டையுடன் வாயில் விரல் வைத்து அமைதியாக இருங்கள் என்று கூறுவது போல் அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டது.
  • சென்னை நங்கநல்லூர் பகுதியில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது, அதில் 234 தொகுதியிலும் சைலண்டா இருக்கணும் 2021ல் நாங்க தான் இருக்கணும் என வாசகம் அச்சியிடப்பட்டுள்ளது.

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதற்கு மாஸ்டர் என படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை புத்தாண்டு முன்னிட்டு வெளியிட்டது. வெளிவந்த சில நேரத்திலேயே 1 மில்லியன் டிவீட்ஸ் தாண்டி சாதனை படைத்தது. அதைத்தொடர்ந்து இரண்டாவது போஸ்டர் பொங்கல் முன்னிட்டு வெளியானது. இந்தப் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் விஜய் கருப்பு நிற சட்டையுடன் வாயில் விரல் வைத்து அமைதியாக இருங்கள் என்று கூறுவது போல் அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டது. விஜய் ரசிகர்கள் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிர்ந்து வந்தனர்.

இந்நிலையில், விஜய் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாக்களில் விஜய் அரசியல் குறித்து பேசுவது வழக்கம், அவரின் பேச்சுக்காக ரசிகர்கள் மட்டுமல்லாமல் அரசியல் தலைவர்களும் எதிர்பார்ப்பார்கள். பின்னர் தொடர்ச்சியாக விஜய் அரசியலுக்கு வருவதன் காரணமாகவே இந்த மாதிரி அவர் பேசுகிறார் என பலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதனால் அவரது பேச்சி அரசியல்வாதிகளிடையே சர்ச்சையை கிளப்புவது வழக்கமான ஒன்று, பின்பு அவரது படமும் வெளியாக இருக்கும் நிலையில் தடங்கல் வருவதும் அண்மைக்காலங்களில் நடந்து வருகிறது.

அதுபோன்று, தற்போது சென்னை நங்கநல்லூர் பகுதியில் நடிகர் விஜய்யின் புகைப்படத்துடன் கூடிய மாஸ்டர் திரைப்படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது, அதில் 234 தொகுதியிலும் சைலண்டா இருக்கணும் 2021ல் நாங்க தான் இருக்கணும் மக்கள் பணி செய்ய வரும் மாஸ்டர் என்ற வாசகத்துடன் அந்த போஸ்டர் ஒட்டப்பட்டு இருப்பது தற்போது சர்ச்சையை கிளப்பி பரபரப்பாக மாறியுள்ளது. தொடர்ச்சியாக விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது பலரும் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்து வரும் நிலையில் இந்த போஸ்டர் அந்த பகுதியில் செல்வோரின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. இதுபோன்று சென்னையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டது. அந்த போஸ்டரில் CM of Tamilnadu எனவும், CM என்றால் Collection Master என்று விளக்கமும் கொடுத்திருந்தனர். இதனால் இந்த போஸ்டர் சர்ச்சையை கிளப்பியது என குறிப்பிடப்படுகிறது.

தமிழ்நாடு CM-ஆன தளபதி விஜய்.! ரசிகர்களின் போஸ்டரால் உருவான சர்ச்சை.!

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்