மாணவி சோபியாவுக்கு ஆதரவு பெருகுகின்றது.!! இயக்குனர் போட்ட ட்வீட் .

தென்காசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். விமானத்தில் 3-வது இருக்கையில் அமர்ந்து அவர் பயணம் செய்தார்.

அதே விமானத்தில் 8-வது இருக்கையில் கனடாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தூத்துக்குடியை சேர்ந்த சோபியா (வயது 28) என்ற பெண் அமர்ந்திருந்தார். அப்போது சோபியா திடீரென பா.ஜனதா கட்சிக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினார். இதனால் விமானத்தில் பரபரப்பு நிலவியது.

இதையடுத்து விமானம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தை அடைந்ததும் தமிழிசை சவுந்தரராஜன், சோபியாவிடம் கோ‌ஷம் எழுப்பியது தொடர்பாக கேட்டார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தமிழிசைக்கு ஆதரவாக அவருடன் வந்த பா.ஜனதா நிர்வாகிகளும் சேர்ந்து பேசியதால் பரபரப்பு உண்டானது. இதைத்தொடர்ந்து விமானத்தில் மாணவி கோ‌ஷம் எழுப்பியது தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன், தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் மற்றும் சம்பந்தப்பட்ட விமான நிறுவன அலுவலகத்திலும் புகார் செய்தார்.

புதுக்கோட்டை போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆராய்ச்சி மாணவி சோபியாவிடம் விசாரணை நடத்தினர். தமிழிசை சவுந்தரராஜன் கொடுத்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலை மற்றும் போலீசார், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் (ஐ.பி.சி.290), பொது இடத்தில் அரசு, அரசு சார்ந்த உயர் அதிகாரிகளுக்கு எதிராக மக்களை கிளர்ந்து எழச்செய்யும் வகையில் பேசுதல் (ஐ.பி.சி.505(1)(பி), போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல் (75(1)(சி) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் மாணவி சோபியா மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

பின்னர் அவரை தூத்துக்குடி 3வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு தமிழ்செல்வி வீட்டுக்கு அழைத்து சென்று அவரது முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து சோபியாவை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அவரை நெல்லை கொக்கிரகுளம் பெண்கள் சிறையில் அடைத்தனர்…

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை உண்டாக்கியது.மாணவி சோபியாவுக்கு ஆதரவாக அரசியல் தலைவர்கள் , நடிகர்கள் என தொடர்ந்து ஆதரவு கொடுத்தும்,கைது நடவடிக்கையை கொண்டித்தும் பேசி வருகின்றனர்.இந்நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களும் தன்னுடைய ட்வீட் பக்கத்தில் ஆதரவாக பதிவிட்டு பிஜேபிக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளார்..

அதில் அவர் கூறியதாவது ,

ஜனநாயகத்தின் குரல் என்றால் அது சோபியாதான் என்ற வகையில் ட்வீட் செய்துள்ளார்.அது மட்டுமில்லமல்

சில ஹேஸ்டக்கும் செய்த்துள்ளார்.

#பாசிச பாஜக ஓழிக

#பாசிச பிஜேபி

போன்ற ஹேஸ்டக்குகள் நேற்று இந்திய அளவில் முதலிடத்தில் இருந்தது.

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment