நான் தமிழன்,ப்ளீஸ் தமிழ்ழ பேசுங்க-ஹிந்தியில் பேசிய வழக்கறிஞரிடம் கெத்து காட்டிய சுப்ரமணிய சுவாமி

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி முறைகேடாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.இதனைத்தொடர்ந்து பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

நேற்று நேஷனல் ஹெரால்ட் வழக்கின் விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்றது.இதில்,சோனியா காந்தி,ராகுல் காந்தி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சீமா ஆஜராகினார்.அப்பொழுது நீதிபதிகள் சுப்ரமணிய சுவாமியை குறுக்கு விசாரணையை செய்ய வழக்கறிஞர் சீமாவிற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதனையடுத்து சீமா சுவாமியை குறுக்கு விசாரணை செய்தார்.ஆனால் அவர் ஹிந்தியில் பேசினார். அப்பொழுது திடீரென்று சுவாமி,ஆங்கிலத்தில் பேசுங்கள்,இது தான் நீதிமன்றத்தில் மொழி என்று கூறினார்.இதற்கு நீதிபதி கூறுகையில்,ஹிந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டுமே நீதிமன்ற மொழிதான் என்று கூறினார்.ஹிந்தி தேசிய மொழி என்றும் கூறினார்.சீமா மறுபடியும் ஹிந்தியில் கேள்வி கேட்க,சுவாமி மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தார்.அவர் கூறுகையில் ,தயவு செய்து ஆங்கிலத்தில் பேசுங்கள்,நீங்கள் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள் நான் தமிழன் என்று தெரிவித்தார்.இதன் பின்னர் சீமா ஆங்கிலத்தில் கேள்வி கேட்டார்.இதனால் நீதிமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.