2019ல் நடக்க உள்ள உலகக் கோப்பை தகுதிச் சுற்றின் 7 சிறப்பம்சங்கள்.!

2019ல் நடக்க உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிப் போட்டி ஜிம்பாப்வேயில் நடைப்பெறுகிறது. இதில் வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட  10 அணிகள்  உலகக் கோப்பை போட்டிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிப் போட்டி மார்ச் 4-25 வரை நடைப்பெற உள்ளது.தகுதிப்போட்டிகளின் அடிப்படையில் அணிகள் தேர்வுசெய்யப்படும்.
ஆப்கான் அணி கேப்டன் அஸ்கர் ஸ்டானிக்சாய் காயம் காரணமாக போட்டியில் பங்கேற்காததால், கேப்டனாக 19 வயதான ரஷீத் கான் பொறுப்பு ஏற்றுள்ளார். இவர் ஒருநாள் போட்டியில் பல சாதனைகள் படைத்தவர் என்ற பெருமை பெற்றவர்.
உலகக் கோப்பை டிவிஷன் 2 சுற்றில் கனடாவை வென்றதன் மூலம், உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதிப் போட்டியில் நுழைந்துள்ளது நேபாளம் அணி.
இரண்டு முறை உலகக் கோப்பை வென்ற பெருமை பெற்ற வெ.இ அணி இந்த முறை நேரடி தகுதி பெற தவறியது.
போட்டியை நடத்தும் ஜிம்பாப்வே அணி கடந்த 1983ம் ஆண்டு முதல் உலகக் கோப்பை போட்டியில் விளையாடி வருகின்றது. தற்போது தகுதிப் போட்டியில் விளையாட உள்ளது.
பாகிஸ்தா சூப்பர் லீக் போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் கிறிஸ் கெய்ல் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பெற்று சாதிக்க உள்ளார்

மேலும் தகவல்களுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு

author avatar
Dinasuvadu desk

Leave a Comment