தீர்மானம் நிறைவேற்றினால் பிரச்சனை தீருமா? – முதல்வருக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி!

வேளாண் சட்டங்கள் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை 14 கேள்விகளை முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வி கேட்டு அறிக்கை வெளியீடு.

வேளாண் சட்டங்கள் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை 14 கேள்விகளை முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டு, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினால் பிரச்சனை தீருமா? என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு திமுக தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றிருந்த அம்சங்கள்தான் வேளாண் சட்டங்களாக கொண்டுவரப்பட்டுள்ளன. பாஜக ஆட்சிக்காலம் தான் விவசாயிகளுக்கு பொற்காலம். இதனை முதல்வரின் மனசாட்சி உணரும் என்றும் தமிழக விவசாயிகள் வழக்கை வளம்பெறும் திட்டங்களுக்கு அரசியல் உள்நோக்கத்தோடு குறுக்கே நிற்காதீர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்