வெள்ளிப்பதக்கம் வென்ற பவினாவுக்கு ரூ.3 கோடி அறிவித்த குஜராத் அரசு

பவினா படேலுக்கு ஊக்கத் தொகையாக 3 கோடி ரூபாய் வழங்குவதாக குஜராத் அரசு அறிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் இந்தியாவின் பவினா படேல் , உலகின் நம்பர் 1 வீராங்கனையான சீனாவின் ஜோஃவ் யிங்கை எதிர்கொண்டார். இப்போட்டியில் சீன வீராங்கனை பவினா படேலை 3-0 (11-7, 11-5, 11-6) என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.

இப்போட்டியில் தோல்வியடைந்த பவினா படேலுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. தற்போது நடைபெறும் பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும். இந்நிலையில், குஜராத்தையும் இந்தியாவையும் தனது விளையாட்டுத் திறமையால் உலக அளவில் பெருமைப்படுத்தியதற்காக மாநில அரசின் ” திவ்யாங் கேல் பிரதிபா ப்ரோத்சகான் புரஸ்கார் யோஜனா ” திட்டத்தின் கீழ் படேலுக்கு ஊக்கத் தொகையாக 3 கோடி ரூபாய் வழங்குவதாக அம்முதல்வர் அறிவித்துள்ளார்.

author avatar
murugan