போராட்டத்தை முடித்து கொண்டு சொந்த ஊர் கிளம்பிய விவசாயிகள்…!

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை முடித்து கொண்டு விவசாயிகள் சொந்த ஊர் கிளம்பியுள்ளனர். மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் விவசாயிகள் கடந்த ஓராண்டுக்கு மேலாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று மத்திய அரசு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மூன்று சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாவை தாக்கல் செய்தது. இதற்க்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் வழங்கப்பட்டதையடுத்து மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்பட்டது. … Read more

விவசாயிகள் போராட்டம் தொடருமா….? நாளை முக்கிய முடிவு!

விவசாயிகள் போராட்டத்தின் அடுத்தகட்ட முடிவு என்ன என்பது குறித்து நாளை அறிவிக்கப்பட்ட உள்ளது. மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி டெல்லியில் கடந்த ஓராண்டு காலமாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 29 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரின் போது புதிதாக கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் … Read more

தீர்மானம் நிறைவேற்றினால் பிரச்சனை தீருமா? – முதல்வருக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி!

வேளாண் சட்டங்கள் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை 14 கேள்விகளை முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வி கேட்டு அறிக்கை வெளியீடு. வேளாண் சட்டங்கள் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை 14 கேள்விகளை முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டு, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினால் பிரச்சனை தீருமா? என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு திமுக தேர்தல் … Read more

அதிமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது – அமைச்சர் தங்கம் தென்னரசு

வேளாண் சட்ட எதிர்ப்பு தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காதது துரோகம் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் இந்திய முழுவதும் இருக்கும் விவசாயிகளுக்கு எதிரான சட்டம். இந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்பது மிக முக்கியமான ஒன்று. இன்று சட்டப்பேரவையில், வேளாண் சட்ட எதிர்ப்பு தீர்மானத்தை ஆதரிக்காமல் அதிமுக வெளிநடப்பு செய்ததன் மூலம் துரோகம் இழைத்துள்ளது. … Read more

உழவர் பக்கம் இருப்போம் சொல்லும் நீங்கள் ஏன்? தீர்மானத்தை நிறைவேற்றவில்லை – முதல்வர் கேள்வி

பல மாநிலங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றி நிலையில், அதிமுக ஆட்சியில் ஏன் நிறைவேற்றவில்லை என முதல்வர் கேள்வி. தமிழக சட்டப்பேரவையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் எதிரான தீர்மானத்தில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தில் கூட ஒருமனதாக தான் போட்டுள்ளோம். நீங்களும் ஏற்றுக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் தான் இந்த தீர்மானத்தை கொண்டுவந்துளோம். வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தின் வாசகத்தில் கூட ஒருமனதாக நிறைவேற்றப்படும் … Read more

#BREAKING: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை ஏற்க மறுத்து அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு. தமிழக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக, பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை கண்டித்து முன்பு பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததை தொடர்ந்து, அதிமுகவும் தற்போது வெளிநடப்பு செய்துள்ளது. முதலமைச்சர் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் அவசர கோலத்தில் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது எனவும் அதிமுக தெரிவித்துள்ளது. மேலும், மத்திய அரசின் பார்வைக்கு விவசாயிகளின் கோரிக்கைகளை … Read more

நாடாளுமன்றத்துக்கு டிராக்டர் ஓட்டி வந்து ராகுல் காந்தி போராட்டம்!!

வேளாண் சட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரித்து நாடாளுமன்றத்துக்கு அருகே டிராக்டர் ஓட்டி வந்து ராகுல் காந்தி போராட்டம். டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தினந்தோறும் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் அனுமதி பெற்று மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார். இந்த சூழலில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திடீரென நாடாளுமன்றம் வளாகம் அருகே சிவப்பு நிற டிராக்டர் ஓட்டி வந்து, விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியுள்ளார். இதில் காங்கிரஸ் … Read more