ஆளுநருடன் சந்திப்பு ஏன்? – 97 பக்க ஊழல் புகார் பட்டியல் – மு.க ஸ்டாலின் விளக்கம்.!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து, அமைச்சரவை மீது 97 பக்க ஊழல் புகார் பட்டியலை வழங்கியுள்ளோம் என்று முக ஸ்டாலின் பேட்டி.

இன்று காலை 10 மணிக்கு மு.க ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசவுள்ளனர். அப்போது தமிழக அரசின் சில ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஸ்டாலின் புகார் மனு அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், ஆளுநர் சந்திப்பு முடிந்து முக ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார். அப்போது, தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் நிலவுவதாக ஆளுநரை சந்தித்த ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அமைச்சரவை மீது 97 பக்க ஊழல் புகார் பட்டியலை ஆளுநரிடம் வழங்கியுள்ளோம். அமைச்சர்கள் மீது அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் ஆளுநரிடம் மனுவாக அளித்தோம்.

மேலும், 2018-ஆம் ஆண்டு ஊழல் சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளோம். முதல்வர், துணை முதல்வர் சொத்துக்களை வாங்கி குவித்தது குறித்து புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளோம். உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்று பேட்டியளித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்