அதிபர் டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த WHO இயக்குநர்.!

உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம், செய்தியளர்களை சந்தித்து பேசினார். அப்போது அமெரிக்கா அதிபர் ட்ரம்புக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, உலக சுகாதார அமைப்பு எந்த நாட்டுக்கும் ஆதரவாக செயல்படவில்லை என்றும்  கொரோனா வைரஸை வைத்து அரசியல் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்துள்ளார்.  நீங்கள் அதிகமான சவப்பெட்டிகளை உங்கள் தோளில் சுமக்க விரும்பவில்லையென்றால், கொரோனா விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள் என் கூறினார். 

மேலும் இது நெருப்புடன் விளையாடும் விளையாட்டு என்றும் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என தெரிவித்தார். இதனிடையே சமீபத்தில் அதிபர் ட்ரம்ப், உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக  செயல்படுவதாக குற்றம்சாட்டி இருந்தார். கொரோனா குறித்த போதிய முன்னெச்சரிக்கையை வழங்கவில்லை எனவும் அதனால் உலக சுகாதார அமைப்புக்கு வழங்கப்படும் நிதியை நிறுத்தப் போவதாக அறிவித்தார். இந்நிலையில், ட்ரம்பின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த உலக சுகாதார அமைப்பு, அமெரிக்கா தொடர்ந்து நிதியை அளிக்கும் என நம்புவதாக இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்