கொரோனாவால் நிறுத்தப்பட்ட ரூ.1000 நிவாரண நிதி ! மீண்டும் தொடங்கியது

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மருத்துவமனைகளும், மருந்துக்கடைகள், காய்கறி, பழக்கடைகள், மளிகை கடைகள், பெட்ரோல் பங்குகள் போன்ற அத்தியாவசிய கடைகள் வழக்கம் போல இயங்கி வந்தன.மேலும் பொதுப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரேஷன் கடைகள் மட்டும் வழக்கம்போல் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு இடையில் ஏப்ரல் 2ம் தேதி முதல் ரேஷன் கடைகளில்  கொரோனா நிவாரண உதவித்தொகை ₹1000 மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக விநியோகிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.மற்ற மாவட்டங்களில் வழங்கப்பட்டது.

இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூரில் நிறுத்தப்பட்டிருந்து கொரோனா நிவாரண நிதி ரூ.1000 மற்றும் இலவச ரேஷன் பொருட்கள் விநியோகம் செயல்பட தொடங்கியுள்ளது.