2-வது தோல்வியை சந்திக்க போகும் அணி எது ..? கொல்கத்தா – ராஜஸ்தான் இன்று பலப்பரீட்சை!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா அணியும், ராஜஸ்தான் அணியும் மோதவுள்ளது.

நடைபெற்று கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின்-17வது சீசனின் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஈடன் காடன் மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் தொடரின் இந்த வருட புளிப்பட்டியலில் இந்த இரண்டு அணிகளும் முதல் இரண்டு இடத்தில் இருந்து வருகிறது.

மேலும், இந்த இரு அணிகளும் ஒரே ஒரு தோல்வியை மட்டும் தழுவி உள்ளது. கடுமையான இந்த இரு அணிகளுக்கு இடையே ஒரு மிகப்பெரிய போட்டி என்பது இன்றைய நாளில் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும், இதை இரு அணிகளில் ஆக்ரோஷமான பேட்ஸ்மேன்கள், திணற வைக்கும் வைக்கும் பவுலர்கள் என சமமாகவே இருந்து வருகின்றனர்.

நேருக்கு நேர்

இந்த இரு அணிகளுக்கும் இடையே 28 போட்டிகள் நடைபெற்றுள்ளது. அதில் 14 முறை கொல்கத்தா அணியும், 13 முறை ராஜஸ்தான் அணியும் வெற்றி பெற்றுள்ளது. மேலும், 1 போட்டியானது முடிவில்லாமல் இருக்கிறது. இதனால் நேருக்கு நேர் அடிப்படியில் பார்க்கும் போது அதை சமன் செய்ய ராஜஸ்தான் அணி கடுமையாக போராடும் என்பதில் சந்தேகம் இல்லை.

எதிர்ப்பார்க்கப்படும் வீரர்கள் :

கொல்கத்தா அணி வீரர்கள் 

பிலிப் சால்ட்( விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ரிங்கு சிங், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஆண்ட்ரே ரஸ்ஸல், ரமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.

ராஜஸ்தான் அணி வீரர்கள் 

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன்/ விக்கெட் கீப்பர்), ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், அவேஷ் கான், நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சாஹல்.

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.