அரசுக்கு என்ன வேலை..? “மக்களா ரோடு போடுவாங்க” அரசை வெளுத்து வாங்கிய சுப்ரீம் கோர்ட்டு..!!

சாலை விபத்துகள் குறித்த வழக்கில், குண்டும், குழியுமான சாலைகளை மக்களா பராமரிக்க முடியும் என சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

Image result for சாலை விபத்துகள்

புதுடெல்லி,

சாலை விபத்துகள் தொடர்பான ஒரு வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு, நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த ஆண்டு, குண்டும், குழியுமான சாலைகளால் ஏற்பட்ட விபத்துகளில் 3 ஆயிரத்து 597 பேர் பலியானதாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் புள்ளி விவரம் வெளியிட்டுள்ளதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
Image result for சாலை விபத்துகள்
அதே சமயத்தில், இந்த புள்ளி விவரம் குறித்து சில மாநிலங்கள் சர்ச்சையை எழுப்புவது துரதிருஷ்டவசமானது என்று அவர்கள் கூறினர்.

Image result for ‘சாலைகளை பராமரிக்க
மேலும், ‘‘சாலைகளை பராமரிக்க முடியவில்லை என்று மாநிலங்கள் எப்படி சொல்லலாம்? அதை மக்களா பராமரிக்க முடியும்? பராமரிக்க முடியாத மாநிலங்கள், எல்லா சாலைகளையும் அகற்ற போகிறார்களா?’’ என்று நீதிபதிகள் கேள்வி விடுத்தனர்.நீதிபதிகளின் இந்த காட்டமான கேள்வி சாலை போக்குவரத்து அதிகாரிகளை ஆடி போக செய்துள்ளது.

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment