உங்கள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க வேண்டுமா? அப்ப இந்த உணவுகளை கொடுங்க !

குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும். பெற்றோர்களை

By leena | Published: Feb 10, 2020 09:10 AM

குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும். பெற்றோர்களை பொறுத்தவரையில் தங்களது குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மிகவும் கவனம் செலுத்துவதுண்டு. அதிலும், குழந்தை பிறந்த நாள் அந்த குழந்தை ஒரு அளவுக்கு வளரும் வரை அவர்களது உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். தற்போது இந்த பதிவில், குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்க எப்படிப்பட்ட உணவுகளை கொடுக்க வேண்டும் என்பது பற்றி  பார்ப்போம்.

தாய்ப்பால்

குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்பது மிகவும் அவசியமான ஒன்று. எனவே குழந்தை பிறந்த நாள் முதல், 6 மாதங்கள் வரை குழந்தைக்கு தாஅய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியமான ஒன்று. எனவே, பால் கொடுக்கும் தாய்மார்கள் பால் சுரக்கக் கூடிய உணவுகளை அதிகமாக உண்ண வேண்டும்.

வாழைப்பழம்

குழந்தைகளுக்கு 6 மாதங்கள் முடிந்த பின்னர் வாழைப்பழங்கள் கொடுப்பது நல்லது. பச்சை வாழைப்பழத்தை தவிர்த்து மற்ற வாழைப்பழங்களை கொடுத்து வந்தால், அதில் சத்துக்கள் குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்க செய்து, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

நெய்

8 மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு உணவில், நெய் சேர்த்து கொடுப்பது மிகவும் நல்லது. பொங்கல், உப்புமா, தோசை மற்றும் சப்பாத்தி போன்ற உணவுகளில் நெய் சேர்த்து கொடுப்பது நல்லது.

நேந்திர பழ கஞ்சி

குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு நேந்திரம் பழ கஞ்சி மிகவும் நல்லது. இது குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், உடல் எடையையும் அதிகரிக்க செய்கிறது.
Step2: Place in ads Display sections

unicc