பேட்ட & விஸ்வாசம்  திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு  அனுமதி கிடையாது …!அமைச்சர் கடம்பூர் ராஜூ

பேட்ட & விஸ்வாசம்  திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு  அனுமதி வழங்கப்படவில்லை என்று  அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில், பேட்ட & விஸ்வாசம்  திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலித்தால் முதற்கட்டமாக 50,000 அபராதம், 2-வது கட்டமாக 1 லட்சம் அபராதமும், 3-வதாக திரையரங்கு உரிமம் ரத்து செய்யப்படும் என்று  அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Leave a Comment