உன்னாவ் விவகாரம் : பிரதமர் மோடி மௌனம் காப்பது ஏன்? ராகுல்காந்தி கேள்வி

  • உன்னாவ் என்னுமிடத்தில் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
  • உன்னாவ் விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனம் காப்பது ஏன்? என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்
கடந்த சில நாட்களுக்கு முன் தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார்.இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் இதனை போன்று உத்திரபிரதேச மாநிலம் உன்னாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரேங்கேறியுள்ளது.அங்கு பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது இளம் பெண் புகார் அளித்தார்.பின்னர்  தன்னை பாலியல் வன்கொடுமை செய்த நபர்களால் அந்த பெண் எரித்து கொல்லப்பட்டார்.இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதன் காரணாமாக பலரும் வலுவான  கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இது குறித்து காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கூறுகையில், உலக அளவில் இந்தியா பலாத்கார தலைநகராக பார்க்கப்படுகிறது .இந்தியாவால் ஏன் பெண்களை பாதுகாக்க முடியவில்லை என உலக நாடுகள் கேட்கின்றது .உன்னாவ் விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனம் காப்பது ஏன்? என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.