U19 ஆசிய கோப்பை – சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்.

19 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வந்த நிலையில், இன்று நடைபெற்ற ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இலங்கையை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றி மூலம் இந்தியா அணி U19 ஆசிய கோப்பையை தொடர்ந்து மூன்றாவது முறையாக வென்றுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது. மழையால் டிஎல்எஸ் முறையில் இலங்கையை ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பையை ஏழாவது முறையாக இந்தியா கைப்பற்றியது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்