நம்பிக்கைகளைக் கொணர்வதே மாற்றம் – கமலஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

நாளை புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

அந்த பதிவில், ‘நம்பிக்கைகளைக் கொணர்வதே மாற்றம். ஓர் ஆண்டு மாறி புது ஆண்டு வருகிறதெனில், அது நம்முள் புதுப்புது நம்பிக்கைகளைப் பதியனிடுகிறது. இந்தப் புத்தாண்டில் உங்கள் அனைவரின் நம்பிக்கைகளும் செயலாக்கம் பெறட்டும். புத்தாண்டு வாழ்த்துகள்.’ என பதிவிட்டுள்ளார்.