Connect with us

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னை

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் 47வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் 47-வது நாளாக விலைமாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40 க்கும், டீசல் ரூ.91.43க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் தினமும் பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.

மத்திய அரசின் கலால் வரி குறைப்பால், தீபாவளிக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் 10 ரூபாயும் குறைந்த நிலையில், கடந்த 47 நாட்களாக அவற்றின் விலை மாற்றப்படாமல் இன்று வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தீபாவளி பண்டிகைக்கு முன்பு பெட்ரோல், டீசல் விலை தொடர் உயர்வால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளானர். இந்த மத்திய அரசு கலால் வரி குறைப்பால், கடந்த 47 நாட்களாக அவற்றின் விலை மாற்றமின்றி நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. இது, வாகன ஓட்டிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading

More in சென்னை

To Top