7 பேரின் விடுதலைக்காக மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார் தொல்.திருமாவளவன்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளான, பேரறிவாளன், முருகன், நளினி உட்பட 7 பேர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனையில் உள்ளார்.

இவர்களின் விடுதலைக்காக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாதங்கள் கடந்து விட்டன. இந்த தீர்மானத்தில் ஆளுநர் கையெழுத்திட்டால் மட்டுமே தீர்மானத்தை செயல்படுத்த முடியும். ஆனால் தற்போது வரை ஆளுநர் கையெழுத்திட வில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல் திருமாவளவன், இன்று பேரறிவாளன் அம்மா அற்புதம்மாள் உடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்திக்க உள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.