இந்தியாவின் நம்பர் 1 முதல்வர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைக்கப்பட இதுதான் காரணம் – அமைச்சர் சிவசங்கர்

முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டமாக பெண்கள் நகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என கொண்டு வந்துள்ளார். 

இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அரியலூரில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றினார். அதனை தொடர்ந்து அமைச்சர் சிவசங்கர் அவர்கள் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், இந்தியாவின் நம்பர் 1 முதல்வர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைக்கப்பட  காரணம் என்னவென்றால், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டமாக பெண்கள் நகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என கொண்டு வந்துள்ளார். ஒவ்வொரு நாளும் 40 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் இலவச பேருந்துகளில் பயணிக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

Leave a Comment