திமுக எம்பி ராசாவுக்கு சிபிஐ சம்மன்!

திமுக எம்பி ஆ.ராசா உள்ளிட்ட 4 பேர் நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.

சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசாவுக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி, திமுக எம்பி ஆ.ராசா, கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ், விஜய் சரதாங்கனி ஆகிய 4 பேரும் ஜனவரி 10-ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக ஆ.ராசா மீது கடந்த 2015-ல் சிபிஐ வழக்குப்பதிவு செய்திருந்தது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ராசா மீதான வழக்கில் கடந்த மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்த நிலையில், தற்போது நேரில் ஆஜராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

Leave a Comment