காமெடி கதாபாத்திரங்களில் நடிக்காததற்கு இது தான் காரணம்…உண்மையை போட்டுடைத்த ஆர்.ஜே.பாலாஜி.!

காமெடி கதாபாத்திரங்களில் நடிக்காததற்கு இது தான் காரணம்…உண்மையை போட்டுடைத்த ஆர்.ஜே.பாலாஜி.!

Default Image

ஆர்.ஜே.பாலாஜி என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது அவருடைய காமெடி தான். அந்த அளவிற்கு அவர் நகைச்சுவையான கதாபாத்திரங்களில் நடித்தால் அனைவரையும் சிரிக்க வைத்துவிடுவார் என்றே கூறலாம். ஆனால், சமீபகாலமாக ஆர்.ஜே.பாலாஜி காமெடியான கதாபாத்திரங்களில் நடிக்கவில்லை என்பதால் எதற்காக அவர் நடிக்கவில்லை என்ற கேள்வி ஒரு பக்கம் எழுந்துள்ளது.

RJ Balaji
RJ Balaji [Image Source: Twitter ]

இதனையடுத்து, இது குறித்து ரன் பேபி ரன் படத்தின் ப்ரோமோஷன் காக சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஆர் ஜே பாலாஜி மனம் திறந்த சமீபகாலமாக காமெடியான கதாபாத்திரங்களில் நடிக்காததற்கான காரணத்தை கூறியுள்ளார். இது குறித்து பேசிய ” நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு எனக்கு நிறைய படங்களில் காமெடியான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.

RJ Balaji
RJ Balaji [Image Source: Twitter ]

ஆனால் அந்த படங்கள் எதுவுமே எனக்கு பிடிக்கவில்லை. பெரிதாக என் கதாபாத்திரமும் இல்லை. மேலும்  நான் அந்த மாதிரி காமெடியான கதாபாத்திரத்தில் இனிமேல் நடிக்க வேண்டாம் என்று எல்லாம் முடிவு எடுக்கவில்லை. நல்ல கதாபாத்திரமாக எனக்கு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று திட்டமிட்டு இருந்தேன் ஆனால் அதுபோல எனக்கு வரவே இல்லை”  என கூறியுள்ளார்.

Run Baby Run
Run Baby Run [Image Source: Twitter ]

மேலும் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ரன் பேபி ரன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த பலரும் அருமையாக இருப்பதாக தங்களுடைய கருத்துக்களை கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *